Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆச்சரியப்படும் அளவுக்கு அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கிராம்பு !!

Webdunia
கிராம்பை பவுடராக தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும். எலும்புகள் வலுபெறும் என பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


இவை எலும்பில் உள்ள எனாமல் தேயாமல் பாதுகாக்கின்றது. முதுமை காரணமாக ஏற்படும் எலும்பு தேய்மானத்தை கிராம்பு சரிசெய்கின்றது.
 
தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு இரண்டு கிராம்பை தின்று சிறிதளவு வெந்நீர் குடித்து வந்தால் கை, கால் நடுக்கம் குறையும். கிராம்புவின் அறிவியல் பெயர் சிஸ்ஸிகியம் அமோடிகம் ஆகும். இது மருத்துவ குணங்கள் கொண்டது. 
 
வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் இ, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், தையமின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்களும், அழற்சி மற்றும் பாக்டீரியாக்களை தடுக்கும் இயல்புகளும் கிராம்பில் உள்ளன. கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுக் கோளாறுகள் மற்றும் பல், தொண்டை வலிகளை போக்கும். 
 
கிராம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது வயிற்றில் இருக்கும் புன்களை சரிசெய்ய உதவுகின்றது. வயிற்று அல்சர் போன்ற பிரச்சணைகளால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து கிராம்பு பொடியை சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் முற்றிலுமாக சரிசெய்யப்படும்.
 
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, அமிலத்தன்மை (அசிடிட்டி) ஆகியவற்றை குணமாக்குவதோடு செரிமானத்தையும் அதிகரிக்கும். பல்லில் வலி இருக்குமிடத்தில் கிராம்பை வைத்தால் வலி மரக்கும். 
 
கிராம்பை வெந்நீருடன் உள்ளுக்குள் எடுத்துக்கொண்டாலும் பல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். கிராம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இருமல், சளி, வைரஸ் தொற்று, சைனஸ் மற்றும் ஆஸ்துமா தொல்லைகளிலிருந்து விடுபடவும் கிராம்பு உதவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments