நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பமா ? – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை !

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (13:36 IST)
நெஞ்செரிச்சல் மற்றும் சாப்பிட்ட புளித்த ஏப்பம் ஆகியப் பிரச்சனைகளில் அவதிப்படுவோர் தினசரி வில்வ இலைகளை சாப்பிட்டு வர இந்த பிரச்சனைகள் சரியாகும்.

இந்தப் பரபரப்பான காலத்தில் மன அழுத்தம் மற்றும் வியிற்றில் உள்ள அமிலங்களின் மாற்றத்தால் சிலர் சாப்பிட்ட உணவுகள் செரிக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாப்பிட்ட உணவு வயிற்றை விட்டு உணவுக்குழலை நோக்கி வெளித் தள்ளப்படுதல் போன்ற பிரச்சனைகளும் சிலருக்கு வருவதுண்டு.

இதனால் திடமான சில உணவுப் பொருட்களை சாப்பிடும் போது உணவுப்பாதையில் கஷ்டமாகவும் நெஞ்செரிச்சல் போன்றப் பிரச்சனைகளையும் சிலர் உணர்வர். இதனால் சாப்பிட்ட உணவு சரியானக் காலத்தில் செரிமாணம் ஆகாமல் வயிற்றிலேயே அதிக நேரம் இருப்பதால் வயிற்றுப்புண் மற்றும் குடற்புண் ஆகியப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் உடல் தனது சராசரி வெப்பத்தை விட அதிகமாகிறது.

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து வில்வ இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் சூடு சமநிலை அடைந்து செரிமானமின்மை மற்றும் புளித்த ஏப்பம் ஆகியப் பிரச்சனைகள் குறையும். இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் காரமான மற்றும் அமிலவகை உணவுப்பொருட்களைத் தவிர்த்துவிடுதல் நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் எடையை எளிய முறையில் குறைக்க அற்புதமான 5 வழிகள்!

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக் கீரை! அதிசய பலன்கள் தரும் எளிய சமையல் முறை

முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

வாரம் ஒருமுறை கோவைக்காய் சாப்பிடுங்கள்.. ஏராளமான நன்மைகள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

அடுத்த கட்டுரையில்
Show comments