Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காளான் சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் நன்மை !

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (23:55 IST)
காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது.
 
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவு காளானாகும். காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது. இதில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்துகளை நமது உடல் விரைவாக ஏற்றுக்கொள்வதால் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை  குறைபாடு நீங்கி உடல் பலம் பெற தொடங்கும்.
 
காளான் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல், கொலஸ்ட்ராலின் அளவை சரியான விகிதத்தில் பராமரித்து உடலுக்கு நன்மையை செய்கிறது.
 
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாக காளான் இருக்கிறது. இதில் குறைந்த அளவே கார்போஹைட்ரட் சத்து  இருப்பதால் உங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியான விகிதத்தில் ரத்தத்தில் தினமும் ஒரு முறை சிறிதளவு காளான் உணவை  சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பலத்தை அளிக்கும்.
 
எர்கோத்தியோனின் எனப்படும் மூலப்பொருள் காளானில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை  மேம்படுத்துகிறது.
 
காளான் புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தபோது சிறந்த பலன் தந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக மார்பக புற்று, பிராஸ்ட்ரேட் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், காளானை சாப்பிட்டு வந்த போது அதிலிருக்கும் புற்று செல்களை அளிக்கும்  ரசாயனங்கள் மேற்கூறிய புற்று நோயாளிகளின் நோய் பரவும் தன்மையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றுகிறது.
 
உடலிலில் ஓடும் ரத்தத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம் ஆகும். இந்த இரும்புச்சத்து உடலுக்கு வலுசேர்த்து காயங்களிலிருந்து உடலை வேகமாக ஆற்றும் வலுசேர்த்து திறம்பட செய்கிறது. செம்பு சத்து ஈரலின் பணிகளை திறம்பட செய்ய ஊக்குவிக்கிறது. காளான் இந்த இரண்டு  சத்துக்களையும் அதிகம் கொண்டது. 
 
உணவாக உண்ணப்படும் காளான்களில் பலவகைகள் உள்ளன. அனைத்து காளானிலும் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. பொட்டாசியம் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் இருக்கும் இறுக்கத்தை மற்றும் ரத்த அழுத்தம் உயராமல் தடுக்கிறது. வாரமொரு முறை காளான் உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்த பிரச்சனைகள் குறையும்.
 
ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை அரைத்து சாறெடுத்து, சுண்ட காய்ச்சி அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வர தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து முடி நன்கு வளர தொடங்கும். முடி கொட்டுவதும் நிற்கும்.
 
ஆவாரம் பூவுடன் சிறு வெங்காயம், பருப்பு சேர்த்து கூட்டு செய்து வாரம் ஒரு முறை உண்டு வர உடல் அழகு பெறும்.
 
வடிக்கட்டி வைத்துள்ள ஆவாரம் பூவின் தண்ணீரைக் கொண்டு முடியை அலச பளபளவென்றிருக்கும். இதனால் உடல் நிறமும் கூடுவதுடன்   புத்துணர்வாகவும் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments