Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொப்பை குறைய அன்றாட உணவில் இவை இருக்கனும்

Webdunia
வியாழன், 6 மே 2021 (23:47 IST)
முட்டைக்கோஸில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், தொப்பை வளர்வது குறையும். அதுமட்டுமின்றி,  அன்றாட உணவில் சேர்த்து வர தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.
 
சமைக்கும் போது உணவில் வெஜிடேபிள் ஆயிலை சேர்ப்பதற்கு பதிலாக, கடுகு எண்ணெயை சேர்த்து வந்தால், உடலில் செரிமான மண்டலம் சுத்தமாகி  கொழுப்புக்கள் வெளியேற ஆரம்பிக்கும். இதனால் உடல் எடையும் குறையும்.
 
பூண்டில் சல்பர் அதிகம் இருப்பதால், அவை கொழுப்புக்களை உடையச் செய்து, உடலில் சேர்வதைத் தடுக்கும். அதற்கு ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட  பின்னரும் ஒரு பூண்டை சாப்பிட வேண்டும். இப்படி பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் விரைவில் தெரியும்.
 
ஓட்ஸில் கலோரிகள் குறைவாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு ஆற்றலையும் தருவதால், இதனை அன்றாடம் காலை உணவாக எடுத்து வருவது நல்லது.
 
விலைக் குறைவில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் தக்காளி. இத்தகைய தக்காளியில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.
 
கீரைகள் கூட உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும் அற்புதமான உணவுப் பொருட்களில் ஒன்று. ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது.
 
அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையை பச்சையாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments