Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிளகிலே மருத்துவம்

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2012 (19:11 IST)
சுறுசுறுவெனும் காரத் தன்மை கொண்ட மிளகு சளி, இருமல், விஷத்தன்மை, வாதம் முதலியவற்றிற்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிளகு நெருப்பின் குணம் உடையது என்பார்கள்.

1. தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு
ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால்
தொண்டை வலி குணமாகும்.

2. மிளகைப் பொடி செய்து, சிறிது உப்பு சேர்த்து சூடாக்கி சிறிது
நெய்யில் கலந்து கொண்டு சாப்பிட்டால் வயிற்று உப்புசம்,
பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

3. சளி, தடுமன் (ஜலதோஷம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு
ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து
வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன்
பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நா‌ட்களிலேயே நல்ல
குணம் காணலாம்.

4. பசியில்லாமலிருந்தால், ஒரு ஸ்பூன் மிளகை வறுத்துப் பொடி
செய்து கைப்பிடியளவு துளசி இலையைப் போட்டுக் கொதிக்க
வைத்து, சூடு ஆறியவுடன் தேனில் கலந்து குடித்தால்
சரியாகும்.

5. நன்றாய் சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்
தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து சூரணம் செய்து
வைத்துக் கொண்டு தேனில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
இரண்டொரு நாள்களில் சரியாகி விடும்.

மிளகில் இத்தனை மருத்துவ குணம் இருப்பதால்தான், நாம் உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்கிறோம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments