Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறுகள்

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2010 (15:41 IST)
ஒரு நாள் இரவு சரியாகத் தூங்கவில்லையென்றாலே மறுநாள் முழுவதும் உடல் அசதி நம்மை எந்த ஒரு பணியையும் நன்றாகச் செய்ய அனுமதிக்காது. ஆனால் தொடர்ந்து பல இரவுகள் அல்லது விட்டுவிட்டு இரவுத் தூக்கத்தை, பணி நிமித்தம் காரணமாகவோ அல்லது பிரச்சனை காரணமாகவோ, தவிர்ப்பவர்களுக்கு பல உடல் சிக்கல்கள் ஏற்படும் என்று மருத்துவம் எச்சரிக்கை செய்கிறது.

இரவில் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்து தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தடையற்ற, ஆழ்ந்த உறக்கமே நல்ல உடல் நிலையை உறுதி செய்யக் கூடியது என்று கூறும் அவர்கள், தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறுகளையும் பட்டியலிடுகின்றனர்.

இரவு சாப்பிட்ட உணவுச் செரியாமை, குறட்டை விடும் நிலை உருவாதல், கால்களுக்கு ஓய்வின்மையால் மறுநாள் நிலவும் உடல் அசதி, பகல் நேரத்தில் உறக்கம் தோய்ந்த முகம், கோவப்படுதல், நினைவு சக்தி குறைதல் ஆகியன மட்டுமின்றி, மன நலத்தையும் பாதிக்கக்கூடியது என்கின்றனர் மருத்துவர்கள்.

அதுவும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஆகிய நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

8 மணி நேர ஆழந்த உறக்கம் வெற்றிக்கான முக்கியத் தேவை, ஏனெனில் அதுவே நமது உடல், மனத் திறமைகளை அதிகரிக்கிறது என்று கூறும் மருத்துவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் என்று கூறுகின்றனர்.

தூங்குவது எப்படி?

இரவில் நல்ல தூக்கம் அவசியம் என்பதை மருத்துவம் மட்டுமல்ல, ஆன்மீகமும் வலியுறுத்துகிறது. இரவு உணவுப் பிறகு உடனடியாக படுக்கைக்குச் செல்லாமல், வீட்டின் முற்றத்திலோ அல்லது (ஆபத்தற்ற) தெருவிலோ சிறிது நேரம் உலவி விட்டு பிறகு வந்து படுத்துறங்க வேண்டும் என்று ஆன்மீக வழிகாட்டிகள் கூறுகின்றனர்.

தூங்குவதற்கு முன் நம் மனதில் தோன்றும் சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல், ‘இதற்கு மேல் என் உடலின் ஓய்விற்கான நேரம் இத ு ’ என்று கூறிவிட்டு, மனதை அமைதிப்படுத்திவிட்டு படுக்கையில் சாய வேண்டும் என்கிறார் அன்னை. ஸ்ரீ அரவிந்தரோடு ஆன்மீக முயற்சி மேற்கொண்ட அன்னை, இரண்டு கால்களையும் நன்கு நீட்டிக்கொண்டு, மல்லாந்து படுத்து, சிறிது நேரம் மனதை ஒருநிலைப்படுத்தியப் பிறகு கண்ணயர வேண்டும் என்றும், இதனை பழக்கப்படுத்தினால் அதுவே நல்லுறக்கத்தை தருமென்றும் கூறுகிறார்.

சித்த வைத்திய நிபுணர்கள், இரவு உணவிற்குப் பிறகு குறைந்து இரண்டு மைல் தூரமாவது நடந்துவிட்டு வந்து படுத்தால் உடல் நலம் கூடும் என்று கூறுகின்றனர். மதிய நேரத்தில் 15 முதல் 30 நிமிடம் வரை தூங்குவதை நல்லது என்று கூறும் சித்த வைத்தியர்கள், ஒரு நாள் இரவு முழுமையாக கண் விழித்தாலோ அல்லது பணியில் ஈடுபட்டாலோ அதனால் உடலில் ஏற்படும் பாதிப்பு சரியாவதற்கு 6 மாதங்கள் ஆகும் என்று கூறுகின்றனர். எனவே இரவு தூக்கத்தை தவிர்ப்பது உடல் நலத்தின் மீது நாம் காட்டும் அக்கறையாகும்.

குறிப்பாக வீட்டில் இருக்கும்போது இரவு நேரத்தில் கணினிப் பணிகளை செய்வதோ அல்லது தொலைக்காட்சி பார்ப்பதோ உடலிற்கும் மனதிற்கும் பெரும் தீங்கிழைக்கக் கூடியது என்கின்றனர்.

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே... போன்ற இனிமையான பாடல்களைக் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவதும் நன்றே.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments