Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்கு ஆரோக்கியத்திற்கு நல்லெண்ணெய் !!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (00:08 IST)
நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.
 
நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும்.
 
உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல்  புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
 
பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லை நீங்கும். தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.
 
நல்லெண்ணெய்யில் மனித உடலால் தயாரிக்க முடியாத லினோலெனிக் அமிலம் மிக அதிக அளவில் இருக்கிறது. இயற்கையிலேயே வைட்டமின் E இருக்கிறது.  நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

அடுத்த கட்டுரையில்
Show comments