Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெசன்ட் நகர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் மஹாயாகம்

Webdunia
இப்பூவுலகில் வாழும் மக்களின் நன்மை கருதி ஆங்காங்கே ஆலயங்களில் ஹோமங்களும ், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து 35 நாட்கள் பல ஹோமங்கள் அடங்கிய நக்ஷத்திர ஸத்ர இஷ்டி மஹாயாகம ், சென்னை பெசன்ட் நகர் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் அண்மையில் நடைபெறவுள்ளது.

வரும் வைகாசி மாதம் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை (மே 26) அமாவாசையன்று துவங்கி ஆனி மாதம் 15-ம் நாள் (ஜூன் 29) முடிய தொடர்ச்சியாக இந்த யாகம் நடக்கிறது.

இதன் முன்னோடியாக வைகாசி 11-ம் நாள் (மே 25-ம் தேதி) வியாழக்கிழமை காலை 8 மணியளவில் இந்த யாகத்தைப் பற்றிய அறிவிப்பு நடக்கிறது. அன்று மாலை இந்த யாகத்தை நடத்தவுள்ள வேதவிற்பன்னர்கள் வேதம் ஓ த, பக்தர்கள் நாம சங்கீதத்துடன் பெசன்ட் நகர் பிரதான வீதிகளில ், ஸ்ரீ வரசித்தி விநாயகர ், வெள்ளித் தேரில் பவனி வருவார்.

சென்ற சில ஆண்டுகளில் சில கொடிய இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு உலகை மிகவும் பாதித்தன. நில நடுக்கங்கள ், சுனாமி தொடர்ந்து வறட்சி நில ை, பிறகு எதிர்பாராத அளவிற்குப் பெருமழ ை, வெள்ளம் எனத் தோன்றி மக்களைத் திக்குமுக்காடவைத்தன அல்லவ ா?

எதிர்காலத்தில் இவை போன்ற சீற்றங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க இறையருளை வேண்டி இந்த யாகம் செய்யப்படுகிறது.

இந்த யாகங்களை முறைப்படி செய்ய முற்றிலும் கற்றுத் தேர்ந்து அதன் படி வாழ்ந்து வரும் அறிஞர்கள் கலந்து கொண்ட ு, சிறப்பாகச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நம்பிக்கையும ், பக்தியும் கொண்டு மனம ், மொழ ி, மெய் ஒன்றுபட்டு இ ன, மொழி வேறுபாடில்லாமல் உலக நன்மைக்காக இந்த யாகம் நடத்தப்படுவதால ், இதில் பங்குகொள்ளும் தனி மனிதர்களும் இறையருளைப் பெற்று தம் விருப்பங்களை வேண்டுதல் செய்துக் கொள்ளலாம்.

இந்த யா க, ஹோமங்கள் செய்யும்போது உண்டாகும் புகை மாமருந்தாக மாறிச் சுற்றுப்புறத்தைத் தூய்மைப் படுத்துவதாக இருப்பதோடு கிருமிகளை அழிக்கவும் வல்லது என்று நம்பப்படுகிறது.

யாகம் நடக்கும் பலமணி நேரமும ், அன்பர்கள் ஒன்றிய மனத்துடனும ், பக்தி உணர்வுடனும் இருப்பதால் தீமைகள் அகலவும ், நன்மைகள் பெருகிடவும் வழிவகுக்கும். இந்த நாட்களில் அன்னதானம் உள்ளிட்ட பல வகை தானங்கள் நடக்கவுள்ளதால் பல ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வகை யாகங்களால் பலன் என்ன என்று பார்க்கும்போத ு, அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள நக்ஷத்திரங்களுக்கான அதி தேவதைகளும ், கால தேவதைகளும் வணங்கப்படுவதால் அந்தந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் அந்தந்த நக்ஷத்திரம் சம்பந்தப்பட்ட யாகத்தில் பங்கேற்பதால் அவரவர் ஜாதகப் படி அமைந்துள்ள ஏழரை நாட்டுச்சன ி, அர்த்தாஷ்டமசன ி, ஜன்மகுர ு, அஷ்டமகுர ு, ராக ு, கேத ு, செவ்வாய் முதலிய கிரகங்களால் ஏற்படும் மனக்கவல ை, குழப்பம ், எதிரிகள் பயம ், நோய்கள ், வறும ை, கடன் தொல்ல ை, திருமணம் தடைப்படுவத ு, குழந்தையின்மை முதலிய எல்லா விதமான இடையூறுகளும் கண்டிப்பாக விலகும்.

நாள்தோறும் கணபதிஹோமம ், ஆண்டுதோறும் வேதபாராயணம ், நான்கு மஹா கும்பாபிஷேகம் என்று இடைவிடாமல் ஆராதனைகள் நடந்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வரசித்தி வல்லப மஹா கணபதி ஆலயத்தில் இந்த மஹா யாகம் நடைபெறுவது மேலும் சிறப்பானதாகும்.

இந்த நாட்களில் (மே 26 முதல் ஜூண் 29 வரை) நடைபெறும் ஹோமங்கள ், சிறப்புச் சொற்பொழிவுகள ், வேத பாராயணங்கள் தவிர குறிப்பிட்ட நாட்களில் இன்னிசைக் கச்சேரிகளும் நடைபெறும்.

27 நக்ஷத்திரங்களும் அவற்றின் பிரதான மற்றும் அதிதேவதைகளும்

வரிசை எண் ....நக்ஷத்திரம் ........பிரதான தேவதை ........அதிதேவத ை

..... 1. ................ அஸ்வினி ..........அஸ்வினி தேவர்கள் .....ஸரஸ்வத ி

..... 2. ................ பரணி ................யமன் .......... .......... ........துர்க ை

..... 3. ................ கார்த்திகை ...... அக்னி .......... ......... ......அக்னி

..... 4. ................ ரோகிணி ..........பிரம்மா .......... .............. பிரம்ம ா

..... 5. ................ மிருகசீர்ஷம் .....ஸோமன் .......... ............ சந்திரன்

..... 6. ................ திருவாதிரை .....ருத்ரன் .......... .............. ருத்ரன ்

..... 7. ................ புனர்பூசம் ..........அதிதி .......... .......... .......அதிதி

..... 8. ................ பூசம் .......... .......பிருஹஸ்பதி .......... ........குர ு

..... 9. ................ ஆயில்யம் ........ஸர்பராஜன் .......... ..........ஆதிசேஷன்

..... 10. ............... மகம் ................பித்ருக்கள் .......... .......... சுக்கிரன ்

..... 11. ............... பூரம் ..........எ.எசூரியன் .......... .......... .....பார்வதி

..... 12. ............... உத்தரம் ........பகன் .......... .......... .........சூரியன ்

..... 13. ............... ஹஸ்தம் ........சவிதா .......... .......... .......சாஸ்தா

..... 14. ............... சித்திரை ........துவஷ்டா .......... ......... ...துவஷ்ட ா

..... 15. ............... சுவாதி ...........வாயு .......... .......... .........வாயு

..... 16. ............... விசாகம் .........இந்திராக்னி ................சுப்ரமண்யர ்

..... 17. ............... அனுஷம் .........மித்ரன் .......... .......... ...லக்ஷ்மி

..... 18. ............... கேட்டை .........இந்திரன் .......... ...........இந்திரன ்

..... 19. ............... மூலம் .............பிரம்மா .......... ..............அசுரர்

..... 20. ............... பூராடம் ..........ஜலதேவர் .......... .........வருணன ்

..... 21. ............... உத்திராடம் ....விஸ்வதேவர்கள் ........விநாயகர்

..... 22. ............... திருவோணம் விஷ்ணு .......... ...........விஷ்ணு

..... 23. ............... அவிட்டம் ......வஸுக்கன் ................வஸுக்கன ்

..... 24. ............... சதயம் ...........வருணன் .......... .........யமன்

..... 25. ............... பூரட்டாதி ......அஜைகபாதர் .............குபேரன ்

..... 26. ............... உத்திரட்டாதி அஹிர்புத்னயர் ..........காமதேனு
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு இழுபறி பணம் கைக்கு வந்து சேரும்! இன்றைய ராசி பலன்கள் (02.08.2025)!

விரதம் இருக்கும்போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா? ஆன்மீகவாதிகள் பதில்..!

உங்களுக்கு இந்த மாதத்தின் முதல்நாள் எப்படி இருக்கும்? இன்றைய ராசி பலன்கள் (01.08.2025)!

தஞ்சை மண்டல வைணவ நவகிரக தலங்கள்: ஓர் ஆன்மிக பார்வை..!

Show comments