Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவதுபடை வீடு - திருச்செந்தூர்

Webdunia
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோயில். இங்குதான் முருகப் பெருமான் தங்கி தேவ குருவாகிய வியாழ பகவானால் பூசிக்கப்பட்டு பிறகு சூரபத்மனை அழித்தார். போரிலே வெற்றிகண்ட பெருமானை தேவர்கள் இத்தலத்திலேதான் பூசித்தனர். சுகப்பிரம்ம ரிஷ ி, வெள்ளை யானை இவர்கள் பூசித்துப் பேறு பெற்ற தலம்.

இத்திருத்தலத்திற்கு செந்தி மாநகர் என்றும ், திருச்சீரலைவாய் என்றும் பெயர்கள் உண்டு. இத்தலம் ஓயாமல ், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றழைக்கப்படுகிறது.

அமைவிடம் :

திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர். இக்கோயிலானது தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ் வருகிறது. இத்தலத்திற்கு நேரடியாக மதுர ை, திருச்ச ி, சென்ன ை, கோவை முதலிய பெருநகரங்களிலிருந்து அரசு விரைவுப் பேருந்துகள் வழியாகச் செல்லலாம். சென்னை-திருநெல்வேலி செல்லும் ரயில் மூலமும் செல்லாம்.

திருச்செந்தூர் சிறப்பு :

திருசெந்தூரின் புராண வரலாற்றை ஆராய்ந்தால ், முருகப்பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட வரும்போத ு, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும ், கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்கியதாகவும் அங்கு தேவதச்சனான விஸ்வகர்மனால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்க ி, தேவகுருவாகிய வியாழ பகவானால் பூசிக்கப் பெற்று அசுரர்களின் வரலாற்றினை அறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

வியாழ nக்ஷத்திரம் :

வியாழ பகவானால் பூசிக்கப்பட்ட ஸ்தலமாதலின் திருச்செந்தூர் வியாழ nக்ஷத்திரம் என்று போற்றப்படுகிறது. இங்கிருந்துதான் குமரக்கடவுள் வீரவாகுத் தேவரை அனுப்ப ி, சூரபத்மனுக்கு அறிவுரை கூறி வரச் சொன்னார். வீரவாகு தேவரும் தூதுச் சென்றார். ஆனால ், அவரது அறிவுரைகள் சூரபத்மனால் ஏற்கப்படவில்லை. தூது பயனற்றுப் போனது. மேலும் சூரபத்மன் வீரவாகு தேவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பினான்.


சூர சம்ஹாரம் :

பிறகு முருகப்பெருமான் இங்கு அம்பிகையிடம் வேல் பெற்ற ு, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். சூரபத்மனை முருகப் பெருமான் தன்னுடைய வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்தார். மனக் கருணையால் அவனை ஆட்கொண்டார்.

மாமரம் இரண்டாகப் பிளந்தது. பிளந்தவுடனேயே அதன் ஒரு பாதி மயிலாகவும ், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.

வெற்றி நகரம் :

இவ்வாறு சூரபத்மனுடன் போரிட்ட ு, வெற்றி வாகை சூட ி, தேவர்களை சூரபத்மனிடமிருந்து மீட்டு வந்தமையால ், திருச்செந்தூர் ஜெயந்திபுரம் என்று வடமொழியால் அழைக்கப்பட்டு வந்தது. அப்பெயரே மருகி செந்தில் என்றாக ி, திருச்செந்தூர் என்று வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் மிகுந்த வெற்றி நகரம் என்றும் பொருளுண்டு. செல்வமும் அருள் வளமும் அளிக்க வல்லது திருச்செந்தூர். இத்திருநகரில் முருகப்பெருமான் ஜெயமூர்த்தியாகவே திகழ்கிறார்.

போரில் அசுரர்களை அழித்த முருகனின் வேலாயுதம் பக்தர்களின் பகையையும் அழித்து வருவதில் ஐயமில்லை.

திருமுருகாற்றுப்படை :

இந்நிகழ்ச்சியை உறுதி செய்யும் வகையில் படித்தோரை பரவசமடையச் செய்யும் திருமுருகாற்றுப்படையில ்,

" வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட் ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வார ி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும ்
துளைத்தவேல் உண்டே துணை."

திருச்செந்தூர் குறித்து வழங்கும் பதிகங்களும ், புராணங்களும ், பிரபந்தங்களும் ஏராளம்.

" சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம்ஹாரம்" என்பது பழமொழி. மாமரமாய்க் காட்சியளித்த சூரபத்மனைக் கொல்வதற்கா க, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவியபோது அதன் கொடூரம் தாங்காமல் கடலும் பின் வாங்கியதாக அருணகிரிநாதர் தனது திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.

நாழிக் கிணறு :

சூரசம்ஹாரம் முடித்த பிறக ு, முருகப் பெருமான் சிவபூஜை புரிந்த இடமும் திருச்செந்தூரேயாகும். சிவலிங்க அபிஷேகத்திற்காக தன்னுடைய கை வேலினால் முருகப் பெருமான் "ஸ்கந்த புஷ்கரிணி" தீர்த்தத்தை உண்டாக்கினார். இத்தீர்த்தம் இன்றளவும் திருச்செந்தூரில் காணப்படுகிறது. இது ஆலயத்திற்கு தெற்கு கடற்கரை ஓரமாகச் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. தற்போது இது நாழிக் கிணறு என்று அழைக்கப்படுகிறது.

ஒரு சதுர அடி அளவே உள்ள இக்கிணறு கடற்கரையில் அமைந்துள்ள போதிலும் இத்தீர்த்தம் உப்புச் சுவையின்றி தூய நீராகவும ், நோய்களைத் தீர்க்கும் குணமுடையதாகவும் இருக்கிறது.

வீரவாகு தேவர் :

திருச்செந்தூருக்கு வீரவாகு தேவர் காவல் தெய்வமாக இருப்பதால் இத்தலத்திற்கு வீரவாகு பட்டினம் என்றும் பெயர். இங்கு வீரவாகு தேவருக்கு பூஜை நடந்த பிறகு மூலவருக்கு நடக்கிறது.

வீரவாகு தேவரின் வலப் பக்கத்தில் கரிய மாணிக்கப் பிள்ளையாருக்கும ், பார்வதி அம்மனுக்கும் சன்னதிகள் உண்டு.

வெள்ளை ஆடை :

மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளை ஆடையே அணிவிக்கப்படுகிறது. செம்பட்டு அணிவிப்பதும் உண்டு. சண்முகருக்கு செம்பட்ட ு, பச்சைப்பட்டு சாத்துவர். வெள்ளை ஆடையில் சிவப்ப ு, கருப்பு பட்டை போடப்பட்டிருக்கும். இதற்கு தாரை போடுதல் என்று பெயர். 3 அங்குலச் சிவப்புப் பட்டை 2 அங்குலக் கருப்புப்பட்டை போடுவர்.

பாலசுப்பிரமணிய சுவாமி :

கர்ப்பக் கிரஹத்தில் வீற்றிருக்கும் மூலவரான முருகப் பெருமான் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இவர் சிவபூஜை செய்யும் வகையில் இவருடைய நான்கு திருக்கரங்களுள் இரண்டு அபய வரத ஹஸ்தங்களையும ், மற்றொன்று புஷ்பமேந்தி அர்ச்சனை செய்யும் கரமாகவும ், ஒரு கரம் ருத்ராட்ச மாலையைத் தாங்கிக் கொண்டும் அமைந்துள்ளன. தவக்கோலத்தில் இருப்பதால் வள்ள ி, தெய்வானை இருவரும் மூலவருடன் இல்லை.

மூலவருக்குப் பின்னால் காணப்படும் அறை "பாம்பறை" என்று அழைக்கப்படுகிறது. இது சுரங்க அமைப்பினை உடைய அறையாகும். இவ்வறையின் மேற்கு பாகத்தில் முருகப்பெருமானால் பூஜிக்கப் பெற்ற பஞ்சலிங்கங்கள் இருக்கின்றன.

விபூதிப் பிரசாதம் :

செந்தில் வேலவன் சன்னதியில் பன்னீர் இலையில் வைத்து இலை விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இலை விபூதிப் பிரசாதம் திருச்செந்தூருக்கே உரியதாகும்.

வேதங்களே இங்கு பன்னீர் மரங்களாக இருந்து முருகப்பெருமானை வழிபடுவதாகவும ், விஸ்வாமித்திர முனிவர் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்ட ு, இலைப் பிரசாதத்தை சாப்பிட்டுத் தனக்கு ஏற்பட்ட குன்ம நோயைப் போக்கிக் கொண்டதாகவும் புராண வரலாறுகள் தெரிவிக்கின்றன.

ஆதிசங்கரர் :

ஷண்மத ஸ்தாபனம் அதாவது சைவம ், வைணவம ், சாக்தம ், காணபத்யம ், சௌரம ், கௌமாரம் ஆகிய ஆறு மதங்களை ஆதிசங்கரர் நிறுவி வரும்போது அவர் மீது பொறாமை கொண்ட அபிநவகுப்தன் என்பவன் அவர் மீது சூனியப் பிரயோகம் செய்து அவருக்குக் காசநோயை ஏற்படுத்தினான். "சங்கரர் திருக்கோகர்ணத்தில் இருக்கையில் செந்தில் சென்று முருகரை வழிபட்டால் நோய் தீரும்" என்று அசரீரி ஒலித்தது.

உடனே திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவனை வழிபட்ட ு, வடமொழியில் சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாமாலையை இயற்றி அணிவித்தார். காசநோய் நீங்கப் பெற்றார்.

குமரகுருபரர் :

ஐந்தாண்டுகள் வரை வாய் பேசாதிருந்தவர் குமரகுருபரர். திருச்செந்தூர் முருகன் வேலினால் அவரது நாவில் எழுதி அவரைப் பேசவைத்தார். வாய் பேசின குமரகுருபரர் பிரசித்திப் பெற்ற கந்தர் கலிவெண்பாவில் குட்டிக் கந்தபுராணமொன்றை இயற்றினார்.

முக்கிய திருவிழாக்கள் :

திருச்செந்தூரில் நடைபெறும் திருவிழாக்களில் முருகப் பெருமானின் திரு அவதாரத்தைக் குறிக்கும் வைகாசி விசாகமும ், சூரபத்மனை அழித்து ஆட்கொண்ட கந்த சஷ்டி விழாவும் மிக முக்கியமானவையாகும். கந்த சஷ்டி விழாவின்போத ு, சூரசம்ஹார உற்சவத்திற்காக சம்ஹார நேரத்தில் கடலும் சற்றுப் பின் வாங்கிக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

எனவ ே, வெற்றிவேல் பெருமானின் திருச்செந்தூர் பாடுங்கள். திருச்செந்தூர் என்று முழங்குங்கள். நோய்கள் தீரும். பகைவர் நலிவர். வறுமை தொலையும். வாழ்வு வளம் பெறும். வாக்குப் பெருகும் மற்றும் நல்லன எல்லாம் வரும்.

இவ்வளவு சிறப்புப் பெற்ற செந்தில் ஆண்டவனை போற்றி வழிபட்டு வாழ்வில் வளம் பல பெறுவோமாக!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – கன்னி!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – சிம்மம்!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – கடகம்!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – மிதுனம்!

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – ரிஷபம்!

Show comments