Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - திணறடிக்கும் மார்ஷியன்

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (20:16 IST)
5. Sicario:


 
சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த க்ரைம் படங்களில் இந்தப் படம்தான் சிறந்த படம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். சென்ற வார இறுதியில் இப்படம் யுஎஸ்ஸில் 7.35 மில்லியன் டாலர்களை வசப்படுத்தியது. இதுவரை இதன் யுஎஸ் வசூல், 26.71 மில்லியன் டாலர்கள்.

4. The Intern:


 
ராபர்ட் டி நீரோ, ஆனி கேத்தவே என்று படத்தின் காஸ்டிங்கே கலக்குகிறது. சென்ற வார இறுதியில் இந்த காமெடிப் படம் 8.66 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரையான யுஎஸ் வசூல் 49.57 மில்லியன் டாலர்கள்.

3. Pan:


 

 
ஜோ‌ ரைட் இயக்கியுள்ள இந்த ஃபேண்டஸி அட்வென்ஜர் ரசிகர்களை கவர தவறிவிட்டது. 150 மில்லியன் டாலர்கள் செலவில் உருவான படம், முதல் மூன்று தினங்களில் 15.53 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது.

2. Hotel Transylvania 2:


 

 
இந்த அனிமேஷன் படம் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் நல்ல வசூலை பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் 20.30 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம் இதுவரை 116.82 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

1. The Martian:


 
 
போன வாரம் இருந்த அதே முதலிடத்தில், த மார்ஷியான். ரிட்லி ஸ்காட் இயக்கியிருக்கும் இந்தப் படம் சென்ற வார இறுதியில் 37 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல், 108.71 மில்லியன் டாலர்கள்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments