Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - மீண்டும் முதலிடத்துக்கு வந்த சூப்பர் ஹீரோக்கள்

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - மீண்டும் முதலிடத்துக்கு வந்த சூப்பர் ஹீரோக்கள்
, புதன், 27 ஆகஸ்ட் 2014 (10:42 IST)
5. When the Game Stands Tall  
 
ஃபுட்பால் விளையாட்டை மையப்படுத்தி இயக்குனர் தாமஸ் கார்ட்டர் இயக்கியிருக்கும் படம். சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 8.4 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.


4. Let's Be Cops
 
இந்த காமெடிப் படம் சென்ற வார இறுதியில் 10.8 மில்லியன் டாலர்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 45.1 மில்லியன் டாலர்கள்.

webdunia

3. If I Stay
 
இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. ஆர்.ஜே.கர்ட்லர் இயக்கியிருந்தார். முதல் மூன்று தினங்களில் இதன் யுஎஸ் வசூல் 15.7 மில்லியன் டாலர்கள்.

webdunia

2. Teenage Mutant Ninja Turtles
 
தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்ததைவிட இந்தப் படம் அதிகம் வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 16.7 மில்லியன் டாலர்கள். இதுவரை யுஎஸ்ஸில் மட்டும் 145.5 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

webdunia

1. Guardians of the Galaxy
 
நான்காவது வாரத்தில் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது இந்த சூப்பர் ஹீரோ படம். சென்ற வார இறுதியில் 17.2 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம் நான்கே வாரங்களில் யுஎஸ்ஸில் 251.5 மில்லியன் டாலர்களை தனதாக்கி அசத்தியுள்ளது.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil