Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸ்

யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸ்
, புதன், 30 ஜூலை 2014 (15:25 IST)
5. Planes: Fire & Rescue
அட்வென்ஜர் காமெடிப் படமான இது ஒரு அனிமேஷன் படம். பொதுவாக யுஎஸ்ஸில் அனிமேஷன் படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங் லிப்ட் இதற்கு இல்லை. சென்ற வார இறுதியில் (ஜூலை 25 முதல் 27 வரை) 9.5 மில்லியன் டாலர்களை வசப்படுத்தியது. இதுவரை இதன் யுஎஸ் கலெக்ஷன் 35.3 மில்லியன் டாலர்கள்.
4. The Purge: Anarchy  
சென்ற வருடம் வெளியான த பர்ஜ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். ஒரே வருடத்தில் இரண்டாம் பாகத்தை வெளியிட்டு அதையும் லாபம் பார்த்திருப்பது அசாதாரணம். சென்ற வார இறுதியில் 10.5 மில்லியன் டாலர்களை தனதாக்கிய இப்படம் இதுவரை 51.9 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
 
3. Dawn of the Planet of the Apes
இந்த புதிய படத்தைவிட முந்தைய முதல் பாகம்தான் அனைவருக்கும் பிடித்துள்ளது. என்றாலும் வசூலுக்கு பஞ்சமில்லை. சென்ற வார இறுதியில் 16.8 மில்லியன் டாலர்களை தனதாக்கிய இப்படத்தின் இதுவரையான வசூல் 172.5 மில்லியன் டாலர்கள்.
 

2. Hercules
WWF புகழ் ராக் என்ற டுவைனி ஜான்சன் ஹெர்குலிஸாக நடித்திருக்கும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடிக்கும் என கருதப்பட்ட இப்படம் இரண்டாவது இடத்தையே பிடித்துள்ளது. அதுவும் சுமாரான 29.8 மில்லியன் டாலர்கள் வசூலுடன்.
webdunia
1. Lucy
முதலிடத்தில் லுக் பெஸானின் லூசி. ஆக்ஷன் படங்கள் என்றால் லுக் பெஸானை அடித்துக் கொள்ள ஆளில்லை. அது அவர் திரைக்கதை எழுதுகிற படமாகட்டும் இல்லை அவர் இயக்குகிற படமாகட்டும். லூசி லுக் பெஸான் திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம். நாற்பது மில்லியன் டாலர்கள் பட்ஜெட்டில் தயாரான படம் முதல் மூன்று தினங்களிலேயே 43.9 மில்லியன் டாலர்களை வசூலித்து வெற்றி பெற்றிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil