Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் 22 ஜம்ப் ஸ்ட்ரீட்

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2014 (17:07 IST)
இந்த வாரம் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 22 ஜம்ப் ஸ்ட்ரீட் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 
5. The Fault in Our Stars  
சென்ற வாரம் முதலிடத்தைப் பிடித்த இப்படம் இரண்டாவது வாரத்தில் சரேலென கீழிறங்கி ஐந்தாவது இடத்தில் ஊசலாடுகிறது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 14.8 மில்லியன் டாலர்கள். முதல் பத்து தினங்களில் இதன் வசூல் 80.8 மில்லியன் டாலர்கள்.
4. Edge of Tomorrow
ஏலியன், டைம் ட்ராவல் இரண்டையும் கலந்துகட்டி எழுதிய புதிய ஸ்கிரிப்ட். விமர்சகர்கள் சமீபத்தில் வந்ததில் நல்ல படம் என்று பாராட்டினாலும் வசூல் ஒன்றும் திருப்திகரமாக இல்லை. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 16.5 மில்லியன் டாலர்கள். இதுவரை 57 மில்லியன் டாலர்களே வசூலித்துள்ளது. இது படத்தின் பட்ஜெட்டில் 30 சதவீதம் மட்டுமே.
 
3. Maleficent 
ஏஞ்சலினா ஜோ‌லியின் இப்படம் சென்ற வார இறுதியில் 18.5 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 163 மில்லியன் டாலர்கள். இன்னும் படத்தின் பட்ஜெட்டான 200 மில்லியன் டாலர்களை நெருங்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி.
 

2. How to Train Your Dragon 2 
2010-ல் இதன் முதல் பாகம் வெளிவந்தது. அப்படத்தை டீன் டெப்லாயிஸும், கிரிஸ் சான்ட்லர்ஸும் இயக்கியிருந்தனர். இரண்டாவது பாகத்தை இயக்கியது டீன் மட்டும். இந்த வாரம் முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் பாகம் 49.5 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தையே பிடித்துள்ளது.
1. 22 Jump Street
ஆக்ஷன் காமெடி வகைமையைச் சேர்ந்த 21 ஜம்ப் ஸ்ட்ரீட் 2012-ல் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. இதில் ஏதோ டாலர் காய்க்கிற சமாச்சாரம் இருக்கு என்பதை உணர்ந்து கொண்டவர்கள் இரண்டே வருடத்தில் அதன் இரண்டாம் பாகத்தை 22 ஜம்ப் ஸ்ட்ரீட் என்ற பெயரில் எடுத்தனர். சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் 3 தினங்களில் 57.1 மில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 21 ஜம்ப் ஸட்ரீட்டை இயக்கிய பில் லார்ட், கிறிஸ்டோபர் மில்லர் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளனர்.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

Show comments