Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்
, வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (17:42 IST)
5. Noah 
ரஸல் க்ரோவ் நடித்திருக்கும் நோவா அதன் மூன்றாவது வார இறுதியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 7.6 மில்லியன் டாலர்கள். இதுவரை 85 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது.
4. Draft Day
கெவின் காஸ்ட்னரின் நடிப்பில் சென்ற வாரம் இப்படம் வெளியானது. ரசிகர்கள், விமர்சகர்கள் ஃபீல்குட் ஃபிலிம் என்று சான்றிதழ் தந்துள்ளனர். முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 9.8 மில்லியன் டாலர்கள்.
 
3. Oculus
இந்த ஹாரர் படமும் சென்ற வாரமே வெளியானது. இல்லாத விஷயங்களை இருப்பது போல் உருவாக்கி, அதனைப் பார்த்து பயப்படுவது அமெரிக்கர்களின் ஹாபி. இல்லையென்றால் இந்த ஹாரர் படத்துக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்குமா? முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 12 மில்லியன் டாலர்கள்.
 

2. Rio 2
பறவைகளை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கேப்டன் அமெரிக்காவை வீழ்த்தும் என்றே நினைத்தனர். ரியோ முதல் பாகம் அந்தளவு ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் இரண்டாம் பாகம் முதல் மூன்று தினங்களில் 39.3 மில்லியன் டாலர்களையே வசூலித்து ஏமாற்றமளித்துள்ளது.
webdunia
1. Captain America: The Winter Soldier
இரண்டாவது வாரத்திலும் கேப்டனுக்கு அதே முதலிடம். சென்ற வார இறுதியில் இதன் வசூல் 41.3 மில்லியன் டாலர்கள். இதுவரை யுஎஸ்ஸில் மட்டும் 158.9 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. பம்பர்ஹிட்.

Share this Story:

Follow Webdunia tamil