Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயர்ன்மேன் கதாப்பாத்திரத்தில் டாம் க்ரூஸ்? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (09:43 IST)
பிரபல மார்வெல் கதாப்பாத்திரமான அயர்ன்மேனாக டாம் க்ரூஸ் நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து வரும் மார்வெல் ஸ்டுடியோஸிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான மார்வெலின் ஸ்பைர்டர்மேன் நோ வே ஹோம் பல ஆயிரம் கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து வரும் மே மாதம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ் ஆப் மேட்னஸ் வெளியாக உள்ளது. மல்டிவெர்ஸ் கான்செப்டை மையப்படுத்திய இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் புகழ்பெற்ற அயர்ன்மேன் கதாபாத்திரத்தில் டாம் க்ரூஸ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக அயர்ன்மேன் படத்தில் நடிக்க டாம் க்ரூஸை கேட்டதாகவும், அவர் அந்த சமயம் பிஸியாக இருந்ததால் ராபர்ட் டோனி ஜூனியர் அதில் நடித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஒருவழியாக டாம் க்ரூஸ் அயர்ன்மேன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments