Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2015 (16:29 IST)
5. The Man from U.N.C.L.E.:


 
கைய் ரிச்சி இயக்கியிருக்கும் புதுப்படம். கைய் ரிச்சியின் திரைமொழியை காப்பியடித்து பல தமிழ்ப் படங்கள் அரைகுறையாக வெளியாகியிருக்கின்றன. யுகேயின் முக்கியமான இயக்குனர். சென்ற வார இறுதியில் இப்படம் 7.42 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் யுஎஸ் வசூல், 26.64 மில்லியன் டாலர்கள்.

4. Hitman: Agent 47:

webdunia

 

ஹிட்மேன் சீரிஸுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 8.20 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. யுஎஸ்ஸில்தான் ஹிட்மேன் ரசிகர்கள் குறைவு போல.

3. Sinister 2:

webdunia

 
ஹாரர் பட ரசிகர்களுக்கு இதன் முதல் பாகம் நல்ல பய விருந்தாக அமைந்தது. சென்ற வாரம் இரண்டாவது பாகம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல், 10.63 மில்லியன் டாலர்கள்.

2. Mission: Impossible - Rogue Nation:

webdunia

 
ரொம்ப வருடங்களுக்குப் பிறகு டாம் க்ரூஸின் படம் ஒன்று அதிக நாள் டாப் 5 -இல் இடம்பிடிக்கிறது. சென்ற வார இறுதியில் 11.70 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம் இதுவரை 157.76 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

1. Straight Outta Compton:

webdunia

 
கேரி கிரேயின் இந்தப் படம் இரண்டாவது வாரத்திலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 26.76 மில்லியன் டாலர்கள். இதுவரை 111.48 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil