Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த ஜங்கிள் புக்கின் சாதனை வசூல்

த ஜங்கிள் புக்கின் சாதனை வசூல்

த ஜங்கிள் புக்கின் சாதனை வசூல்
, வெள்ளி, 20 மே 2016 (14:53 IST)
இந்திய சிறுவனை மையப்படுத்திய கதையான த ஜங்கிள் புக் ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியானது.


 


இப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.
 
சென்ற மாதம் எட்டாம் தேதி வெளியான இப்படம் இதுவரை இந்தியாவில் மட்டும் 36 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாயில் சுமாராக 238 கோடிகள். ஹாலிவுட் படமொன்று இவ்வளவு அதிக வசூலை இந்தியாவில் பெறுவது எளிதல்ல. த ஜங்கிள் புக்கின் வசூலை சாதனை வசூல் என்று சொல்லலாம்.
 
யுஎஸ்ஸில் இப்படம் 311 மில்லியன் டாலர்களையும், சைனாவில் 150 மில்லியன் டாலர்களையும், யுகேயில் 56 மில்லியன் டாலர்களையும் வசூலித்துள்ளது. இந்த மூன்று நாடுகளுக்கும் அடுத்து நான்காவது இடத்தில் 36 மில்லியன் டாலர்களுடன் இந்தியா உள்ளது.
 
யுஎஸ்ஸில் 311 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம் யுஎஸ்ஸுக்கு வெளியே 517 மில்லியன் டாலர்களை வசப்படுத்தியுள்ளது. இன்றும் இப்படம் நல்ல வசூலை பெற்று வருவதால் விரைவில் ஒரு பில்லின் டாலர்களை தொடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் சீரிஸின் 5 வது பாகம் - ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் த லாஸ்ட் நைட்