Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிசம்பர் ஸ்பெஷலாக வரும் த ஹாபிட் - த பேட்டில் ஆஃப் த பைவ் ஆர்மீஸ்

டிசம்பர் ஸ்பெஷலாக வரும் த ஹாபிட் - த பேட்டில் ஆஃப் த பைவ் ஆர்மீஸ்
, புதன், 30 ஜூலை 2014 (19:52 IST)
பீட்டர் ஜாக்சனின் மெகா படவரிசையான த ஹாபிட் சீரிஸின் மூன்றாவது பாகம் இந்த டிசம்பர் திரைக்கு வருகிறது.


 
 
பிரபல நாவலாசிரியர் டோல்கின் எழுதிய த லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவலை பீட்டர் ஜாக்சன் மூன்று பாகங்களாக எடுத்தார். இந்த மூன்று பாகங்களும் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பையும் கலெக்ஷனையும் பெற்றன. இதுவரை உலக அளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் பட்டியலில் இந்தப் படங்களுக்கும் இடம் உண்டு.
 
டோல்கினின் இந்த நாவலுக்கு முந்தைய காலகட்டத்தை சித்தரிக்கும் சின்ன நாவல்தான் இந்த ஹாபிட். அதனை இரண்டு பாகமாக எடுப்பதாக கூறி பிறகு மூன்று பாகங்களாக்கினார் பீட்டர் ஜாக்சன். முதலிரு பாகங்களும் வெளியான நிலையில் மூன்றாவது பாகம் வரும் டிசம்பரில் திரைக்கு வருகிறது.
 
கோடையைப் போலவே கிறிஸ்மஸை முன்னிட்டும் பிரமாண்ட படங்களை வெளியிடுவது ஹாலிவுட்டில் வழக்கம். த ஹாபிட் - த பேட்டில் ஆஃப் த பைவ் ஆர்மீஸ் (The Hobbit: The Battle of the Five Armies) யுகே யில் டிசம்பர் 12 -ம் தேதியும், யுஎஸ்ஸில் டிசம்பர் 17 -ம் தேதியும் வெளியாகிறது. டிசம்பர் 10 -ம் தேதியே வேறு பல நாடுகளில் படம் திரைக்கு வருகிறது. இந்த வருடத்தின் மெகா வசூல் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதே விமர்சகர்களின், ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Share this Story:

Follow Webdunia tamil