Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4 - ஸ்டாலோனின் விடாது கருப்பு

தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4 - ஸ்டாலோனின் விடாது கருப்பு
, திங்கள், 1 செப்டம்பர் 2014 (10:57 IST)
தி எக்ஸ்பென்டபிள்ஸ் 3 அட்டர் பிளாப்பான பிறகும் நான்காவது பாகம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறhர் சில்வஸ்டர் ஸ்டாலோன். மூன்றாவது பாகத்தில் மெஷின் கன் வைத்து ஒரு மிலிட்டரியை இல்லாமலாக்கிய ஸ்டாலோனுக்கு இப்போது வயது 68.
 

தி எக்ஸ்பென்டபிள்ஸ் சீரிஸில் நடிக்கும் அனைவருக்கும் ஸ்டாலோனின் வயதுதான். இந்த முதியோர் டீம் இன்றைய இளைஞர்களுக்குப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லை. மூன்றாவது பாகத்தில் சில இளம் நட்சத்திரங்களை உடன் சேர்த்தும் பருப்பு வேகவில்லை. அதனால் தாத்தாக்களை ஓரம்கட்டிவிட்டு முழுக்க இளைஞர்களுடன் நான்காவது பாகத்தை எடுக்கலாமா என்ற யோசனையில் உள்ளார் ஸ்டாலோன்.

முக்கியமாக வில்லனாக நடிக்க அவர் தேர்வு செய்திருப்பது இருபதே வயதான பாப் பாடகர் ஜஸ்டின் பைப்பர்.

மூன்றாவது பாகத்தில் வில்லனாக மெல் கிப்ஸன் நடித்தார். அவராலே எந்த ஆணியையும் பிடுங்க முடியவில்லை. இந்த இருபது வயசு என்ன செய்யப் போகிறது என்று தாத்தாக்களில் சிலர் முணுமுணுத்தாலும், ஸ்டாலோன் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.

அழிவது என்று முடிவெடுத்தாகிவிட்டது. அறுபதாக இருந்தாலென்ன, இருபதாக இருந்தாலென்ன.

Share this Story:

Follow Webdunia tamil