Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பைடர்மேன் படங்கள் இனிமேல் வராது?? – ஒப்பந்தத்தை முறித்து கொண்ட மார்வெல்

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (13:14 IST)
ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களான மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இடையே இருந்த ஒப்பந்தம் முறிந்ததால் இனிமேல் மார்வெலில் ஸ்பைடர்மேன் படங்கள் வெளியாகாது என செய்திகள் வெளியாகியுள்ளன.

டாம் ஹாலண்ட் நடித்து சமீபத்தில் வெளியாகி 1 பில்லியன் டாலர் வசூல் சாதனை படைத்த திரைப்படம் ஸ்பைடர்மேன்: ஃபேர் ஃப்ரம் ஹோம். ஒந்த படத்தை மார்வெல் மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

பிரபல காமிக்ஸ் ஆசிரியரான ஸ்டான் லீயால் எழுதப்பட்ட காமிக்ஸ் கதாப்பாத்திரம்தான் இந்த ஸ்பைடர்மேன். மார்வெல் காமிக்ஸ் கதாப்பாத்திரங்களை டிஸ்னி நிறுவனம் வாங்கி மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் திரைப்படங்கள் எடுத்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மார்வெல் திரைப்படங்கள் உலகம் முழுவது ஹிட் ஆகியுள்ளன. சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் 2.8 பில்லியன் டாலர்கள் வசூலித்து உலகில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது.

இவ்வளவு ஹிட் படங்கள் மார்வெல் கொடுத்திருந்தாலும் காமிக்ஸ் காலத்திலிருந்தே புகழ்பெற்றிருந்த ஸ்பைடர்மேன் கதாப்பாத்திரத்தின் உரிமம் அவர்களிடம் இல்லை. 2000ம் ஆண்டிலேயே சோனி நிறுவனம் ஸ்பைடர்மேன், வெணோம் உள்ளிட 100க்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களிம் உரிமையை மார்வெல் காமிக்ஸிடம் வாங்கியிருந்தது.

மார்வெல் ஸ்டுடியோஸ் எடுத்து வரும் சூப்பர்ஹீரோ தொடர் வரிசை படங்களில் ஸ்பைடர்மேன் இருந்தால் அதிக ரசிகர்களை ஈர்க்கலாம் என்பதால் சோனி நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டது மார்வெல் ஸ்டுடியோஸ்.

அந்த ஒப்பந்தத்தின்படி ஸ்பைடர்மேன் திரைப்படத்தை இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்க வேண்டும். முழு தயாரிப்பு செலவுகளையும் சோனி நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். கதை, திரைக்கதை முதலியவற்றை மார்வெல் தர வேண்டும். உருவாக்கப்படும் ஸ்பைடர்மேன் படத்தின் விற்பனை மற்றும் வசூலில் இருந்து குறிப்பிட்ட பங்கு மார்வெலுக்கு தரப்படும். தயாரிப்பு நிறுவனம் என்ற இடத்தில் சோனி நிறுவனமே இருக்கும்.

எதிர்கால அவெஞ்சர்ஸ் கதைக்கு ஸ்பைடர்மேன் அவசியம் என்பதால் மார்வெல் இந்த ஒப்பந்தத்திற்கு ஒத்துக்கொண்டது. அதன்படி 2015ல் ஸ்பைடர்மேன் ஹோம்கமிங், 2019ல் ஃபேர் ஃப்ரம் ஹோம் ஆகிய படங்கள் வெளியாகி ஹிட் அடித்தன. மேலும் கேப்டம் அமெரிக்கா:சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், எண்ட் கேம் உள்ளிட்ட படங்களிலும் ஸ்பைடர்மேன் கதாப்பாத்திரம் வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என மார்வெல் தயாரிப்பாளர் கெவின் பெய்ஜ் கேட்டுக்கொண்டதை சோனி நிறுவனம் மறுத்துள்ளது. இதனால் ஒப்பந்தத்தை முடித்து கொள்ளலாம் என கெவின் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஸ்பைடர்மேன் கதாப்பாத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து புதிய அவெஞ்சர்ஸ் அணி உருவாக இருக்கும் நிலையில் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனவே இனி ஸ்பைடர்மேன் கதாப்பாத்திரம் அவெஞ்சர்ஸில் இடம் பெறாது. ஸ்பைடர்மேன் திரைப்படம் வந்தாலும் அது தனிப்படமாக வருமே ஒழிய அவெஞ்சர்ஸ் கதாப்பாத்திரங்கள் அதில் வரமாடார்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலர்ஃபுல் ட்ரஸ்ஸில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் அசரடிக்கும் போட்டோஷூட் ஆல்பம்!

நரகத்துல இருக்குறவனுக்கு சொர்க்கத்தோட சாவி கெடச்சா..?.. எதிர்பார்ப்பைக் கூட்டும் சொர்க்கவாசல் டிரைலர்!

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு.. பின்னணி என்ன?

சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவு… சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ரி ரிலீஸ்… !

அடுத்த கட்டுரையில்
Show comments