பிக்பாஸ் ஃபினாலே: ஐவரில் இந்த இருவர் வெளியேற்றப்பட்டார்களா?

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (08:07 IST)
பிக்பாஸ் ஃபினாலே: ஐவரில் இந்த இருவர் வெளியேற்றப்பட்டார்களா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நேற்றும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் கூறியது போல் எந்த திருப்பமும் இல்லை என்பதை நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்
 
ஐந்து லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு வெளியேறிய கேபி மட்டும் கமல்ஹாசனுடன் உரையாடினார் என்பதும், வீட்டில் உள்ள நண்பர்களிடம் உரையாடி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் கட்டமாக இருவர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒருவர் சோம் என்றும் இன்னொருவர் ரம்யா என்றும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து ஆரி, பாலாஜி மற்றும் ரியோ ஆகிய மூவர் மட்டுமே பிக்பாஸ் ஃபினாலே மேடைக்கு செல்வதாகவும் இதனை அடுத்தே வாக்குகளின் அடிப்படையில் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த அறிவிப்பு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது 
 
இதுவரை கசிந்த தகவலின்படி ஆரி டைட்டில் வின்னர் என்றும் பாலாஜி ரன்னர் என்றும் ரியோ மூன்றாம் இடம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்றைய நிகழ்ச்சி முழுவதும் பார்த்து இந்த தகவல் உண்மைதானா என்பதை உறுதி செய்து கொள்வோம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments