Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குவென்டின் டரன்டினோவுடன் இணைய விரும்பும் பெட்ரோ அல்மதோவர்

குவென்டின் டரன்டினோவுடன் இணைய விரும்பும் பெட்ரோ அல்மதோவர்
, திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (17:41 IST)
உலகப் பிரசித்திப் பெற்ற ஸ்பானிஷ் இயக்குனர் பெட்ரோ அல்மதோவர் ஹாலிவுட்டில் படம் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதுவும், சூப்பர் ஹீரோ டெட்பூல் படம்.


 


அல்மதோவருக்கு இதற்கு முன்பு பல ஹாலிவுட் வாய்ப்புகள் வந்தன. அவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ளாதவர், சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற சூப்பர் ஹீரோ படம் டெட்பூலில் மனதை பறி கொடுத்துள்ளார். டெட்பூல் படத்தின் சீக்வெலை இயக்க விருப்பம் தெரிவித்திருப்பவர், அதற்கான ஸ்கிரிப்டை எழுத சரியான ஆள், குவென்டின் டரண்டினோதான் என்று கூறியுள்ளார்.

டரண்டினோவுடன் இணைந்து அப்படத்தை இயக்கவும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அல்மதோவரும், டரண்டினோவும் இணைந்தால் அது சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும்.



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றி பெற்ற டியூனை மீண்டும் பயன்படுத்தும் யுவன்