Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இப் மேன் 3 யில் நடிக்கும் மைக் டைசன்

இப் மேன் 3 யில் நடிக்கும் மைக் டைசன்
, செவ்வாய், 12 மே 2015 (16:25 IST)
முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். ஹேங்ஓவர், ஸ்கேரி மூவி 5 படங்களில் நடித்தவர், விரைவில் வெளிவரவிருக்கும், மீட் தி பிளாக்ஸ் படத்திலும் நடித்துள்ளார்.


 

 
மைக் டைசன் அடுத்து ஒப்பந்தமாகியிருக்கும் படம், இப் மேன் 3 (Ip Man 3). புரூஸ்லீயின் மாஸ்டரான இப் மேனின் வாழ்க்கை வரலாறைப் பற்றிய இந்த சீரிஸின் முதலிரு படங்களில் இப் மேனாக டோனி யென் நடித்தார். மூன்றாவது பாகத்திலும் அவரே அந்த வேடத்தை ஏற்க இருக்கிறார்.
 
இந்த கடைசிப் பாகம் இப் மேனுக்கும் அவரது சிஷ்யர் புரூஸ்லீக்கும் இடையிலான உறவைப் பற்றியது. இந்த இருவருமே இப்போது உயிரோடு இல்லை. இந்தப் படத்தில் மைக் டைசன் தெருச்சண்டைக்காரராக நடிக்கிறார்.
 
இந்தத் தகவலை மைக் டைசனே உறுதி செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil