Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவர்கள் வருகிறார்கள், ஆச்சரியத்துக்கு தயாராகுங்கள்

அவர்கள் வருகிறார்கள், ஆச்சரியத்துக்கு தயாராகுங்கள்
, திங்கள், 22 ஜூன் 2015 (21:18 IST)
ஆக்ஷன் படங்களில் எப்போதும் முன் வரிசையில் இடம் பிடிப்பவை, மேட் டாமன் நடித்த பார்ன் சீரிஸ் படங்கள்.

மொத்தம் 3 படங்கள். முதல் படம் த பார்ன் ஐடென்டிட்டி, இரண்டாவது த பார்ன் சூப்பர்மஸி, மூன்றாவது த பார்ன் அல்டிமேட்டம். இதில் இரண்டாவது மூன்றாவது பாகங்களை பால் கிரீன்கிராஸ் இயக்கினார்.
 

 
நான்காவதாக, த பார்ன் லீகெஸி என்ற படம் வெளியானது. மேட் டாமன் அதில் நடிக்கவில்லை, பால் கிரீன்கிராஸ் இயக்கவில்லை. படம் மற்ற மூன்று பாகங்கள் அளவுக்கு ரசிகர்களை திருப்தி செய்யவில்லை.
 
இந்நிலையில் மீண்டும் பார்ன் சீரிஸில் இணைந்து பணிபுரிவது என மேட் டாமனும், பால் கிரீன்கிராஸும் முடிவு செய்துள்ளனர். ஐந்தாவது பார்ன் சீரிஸுக்கான கதை திரைக்கதை எழுதும் பணி நடந்து வருகிறது. 
 
ஆக, அவர்கள் மீண்டும் வருகிறார்கள். ஆச்சரியங்கள் நிறைந்த அதிரடிக்கு தயாராகுங்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil