Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாளில் 1250 கோடிகள் - ஜுராஸிக் வேர்ல்டின் மரண மாஸ் வசூல்

Webdunia
திங்கள், 15 ஜூன் 2015 (14:27 IST)
1993 -இல் உலகையே அதிர வைத்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜுராஸிக் பார்க் வெளியானது. உலகம் முழுவதும் வசூலில் பட்டையை கிளப்பிய இப்படத்தின் நான்காவது பாகம், ஜுராஸிக் வேர்ல்ட் சென்ற வாரம் யுஎஸ்ஸில் வெளியானது. 
 
படத்துக்கு ஏற்கனவே எக்கச்சக்க எதிர்பார்ப்பு. படமும் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இருந்ததா... மூன்றே தினங்களில் 1250 கோடிகளை அள்ளி குவித்துள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் அதாவது நேற்றுவரை 204.60 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.
 
இந்த வருடம் வெளியான மெகா பட்ஜெட் படங்களில் ப்யூரியஸ் 7 அதிரடியாக வசூல் செய்து 300 மில்லியன் டாலர்களை கடந்தது. அடுத்து வெளியான அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் இதுவரை யுஎஸ்ஸில் மட்டும் 444 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்து மிரட்டியது. இந்த வசூலை ஏதாவது படம் முறியடிக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மூன்று நாளிலேயே அல்ட்ரானின் பாதி வசூலை எட்டிப் பிடித்திருக்கிறது ஜுராஸிக் வேர்ல்ட். இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 150 மில்லியன் டாலர்கள். கிட்டத்தட்ட 900 கோடிகள். அதனை முதல் மூன்று நாளிலேயே வசூலித்து லாபமும் பார்த்திருக்கிறது.
 
இந்தப் படத்தை இயக்கியிருக்கும் காலின் ட்ரிவோரோவ், ஸேஃப்டி நாட் கியாரண்டீட் என்ற ஒரேயொரு படத்தை மட்டுமே இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments