Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செக்சி சூப்பர்ஹீரோ...? ஓ நோ...

Webdunia
திங்கள், 21 ஜூலை 2014 (11:16 IST)
சிலருக்கு நல்ல உடல்வாகு இல்லாதது பிரச்சனை. சிலருக்கு அது இருப்பது பிரச்சனை. ஜெஸிகா ஆல்பாவுக்கு இரண்டாவது.



 
எஃப்எச்எம் பத்திரிகையின் உலகின் செக்ஸியான பெண் கணக்கெடுப்பில் ஜெஸிகா ஆல்பா முதலாவதாக வந்திருக்கிறார். உலகின் ஹாட் 100 பெண்கள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார். உலகின் ஆல்டைம் செக்சியான பெண்கள் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பிடித்துள்ளது.
 
இவ்வளவு பட்டங்கள் வென்ற ஒருவர் உடலை மூடி புர்கா அணிந்தாலும் அட என்னவொரு செக்சி என்றுதான் சொல்வார்கள். எஸ், ஜெஸிகாவுக்கும் அதுதான் பிரச்சனை.
 
சினிமாவில் செக்சியான நடிகை என்று பெயர் எடுக்கிற நோக்கில் என்னுடைய படங்களை நான் தேர்வு செய்வதில்லை. பென்டர்ஸடிக் 4 படத்தில் நான் சூப்பர்ஹீரோவாக தலைமுதல் பாதம்வரை மூடிய உடையில் வருகிறேன். அதையும் செக்சியாக இருக்கு என்றால் நான் என்ன செய்வது என்று சலித்துக் கொண்டுள்ளார்.
 
இதுவரை நான் நடித்ததில் செக்சியான கேரக்டர் ஒன்றே ஒன்றுதான், சின் சிட்டி படத்தில் வருவது என்றும் கூறியுள்ளார். சின் சிட்டி அவர் சொல்வது போல் செக்சியானதுதான். ஆனால் ஜெஸிகா ஆல்பாவுக்காகவே அவரது இன் டு த ப்ளூ படத்தை பார்க்கிற லட்சக்கணக்கான ரசிகர்கள் உலகில் இருக்கிறார்களே... அதற்கென்ன சொல்லப் போகிறார்?

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

பிரபல டப்பிங் கலைஞர் தேவன்குமார் காலமானார்..! திரையுலகினர் அஞ்சலி..!!

Show comments