Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழ் நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது பெரும் நடிகர் ஜாக்கி சான்

வாழ் நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது பெரும் நடிகர் ஜாக்கி சான்
, வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (12:43 IST)
திரையுலகில் பொன்விழா காணும் ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
நடிகர், தற்காப்புக் கலை நிபுணர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என்று முத்திரை பதித்தவர் ஜாக்கி சான். 30 திரைப்படங்களை இயக்கியுள்ள ஜாக்கிச் சானுக்கு திரைத்துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி ஆஸ்கர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. தற்காப்பு கலையை சினிமாவில் பயன்படுத்தி அதன் மூலம் மக்களை கவர்ந்த ஜாக்கிசான் தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கினார். 
 
ஜாக்கி சானுக்கு முதல் முறையாக கௌரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் இரண்டாவது நடிகர் என்று போர்ப்ஸ் பத்திரிகை இவரை பட்டியலிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏமாற்றுவதை பின்னணியாகக் கொண்ட படத்துக்கு சிவாஜி பெயரா...?