Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அயன் மேன்

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2014 (12:28 IST)
கேப்டன் அமெரிக்கா 3 படத்தில் ராபர்ட் டௌவ்னி ஜுனியரும் நடிக்கிறார். இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
 
மார்வல் நிறுவனம் சூப்பர்ஹீரோ படங்களாக எடுத்துத் தள்ளுகிறது. பேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், அயன் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களில் கேப்டன் அமெரிக்காவும் ஒருவர். முதுகில் கேடயம் வைத்து பறந்து பறந்து சாகஸம் செய்கிறவர். ரசிகர்களின் ஆதரவு இவருக்கு கொஞ்சம் கம்மி. 
2011 -இல் வெளியான கேப்டன் அமெரிக்கா - த பர்ஸ்ட் அவென்ஞர் சுமாராகவே போனது. இந்த வருடம் வெளியான கேப்டன் அமெரிக்கா - த வின்டர் சோல்ட்ஜர் மிகப்பெரிய ஹிட். கேப்டன் அமெரிக்காவும் உலக ரசிகர்களின் மனதில் கௌரவமான இடத்தைப் பிடித்தார்.
 
மார்வலுக்கு இது போதாதா? மே 2016 -ல் கேப்டன் அமெரிக்காவின் மூன்றாவது பாகத்தை வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர். கேப்டன் அமெரிக்காவாக முதலிரு பாகங்களிலும் நடித்த கிறிஸ் ஈவன்ஸே நடிக்கிறார். போனஸ் செய்தி என்னவென்றால் அயன் மேனும் படத்தில் இருக்கிறார். இதற்காக அயன் மேனாக நடிக்கும் ராபர்ட் டௌவ்னி ஜுனியரையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
மார்வல் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments