Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எச்சரிக்கை... இன்விசிபிள் மேன் வருகிறார்

எச்சரிக்கை... இன்விசிபிள் மேன் வருகிறார்
, வியாழன், 11 பிப்ரவரி 2016 (10:03 IST)
இன்விசிபிள் மேன் படம் திரையரங்கில் அப்படத்தைப் பார்க்கும் போது ஏற்படுத்தியதைவிட, அதுபோல் ஒரு மனிதன் இருந்தால், அந்த மனிதன் நாமாக இருந்தால் என்னவாகும் என்ற கற்பனையில் மிரட்டியது அதிகம். அப்படத்தை ரீபூட் செய்கின்றனர்.


 


நாம் இப்போதுதான் இரண்டாம் பாகம் எடுக்கவே ஆரம்பித்திருக்கிறோம். ஹாலிவுட்டில் இரண்டாம் பாகமெல்லாம் சகஜம்.
 
ஒரு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் போது, இன்னொரு பக்கம் அதன் முதல் பாகத்தை ரீபூட் செய்வார்கள்.
 
ஒரு படத்தை அப்படியே தழுவினால் ரீமேக். கருவை மட்டும் எடுத்து காட்சிகளை கொஞ்சம் மாற்றி எடுத்தால், ரீபூட். இன்விசிபிள் மேனின் ரீபூட்டை யூனிவர்சல் ஸ்டுடியோ தயாரிக்கிறது. 
 
இதில் இன்விசிபிள் மேனாக வந்து நம்மை மிரட்டப் போகிறவர், ஜானி டெப்.

Share this Story:

Follow Webdunia tamil