Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட்டில் தயாராகும் கறுப்பு வெள்ளை படம்

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (19:55 IST)
ஹெல்பாய், பினேடு 2, பேன்ஸ் லேப்ரிந்த், பசிபிக் ரிம் என்று குல்லெர்மோ டெல் டோராவின் அனைத்துப் படங்களுமே நம்மை வசீகரிப்பவை. வித்தியாசமான கனவுலகை சிருஷ்டிப்பவை இவரது படங்கள்.


 
 
2013 -இல் வெளியான பசிபிக் ரிம் திரைப்படத்தைத் தொடர்ந்து, கிரிம்ஸன் பீக் என்ற அவரது புதிய திரைப்படம் வரும் 16 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதுவும் அவரது வழக்கமான பாணி திரைப்படம்தான்.
 
பிரமாண்டமான உலகங்களை சிருஷ்டிப்பதில் டோராவுக்கு அலாதி விருப்பம். அதற்கான முயற்சியில் அவர் பல வருடங்களை இழந்திருக்கிறார். ஹெல்பாய் 3, பசிபிக் ரிம் 2 என பல பிரமாண்டப் படங்கள் அறிவிப்போடு அப்படியே நிற்கின்றன. 
 
இந்நிலையில் சின்ன பட்ஜெட்டில் தன்னை புதுப்பிக்கும் ஒரு படத்தை இயக்கப் போவதாக அவர் கூறியுள்ளார். 
 
மெக்சிகன் ரெஸ்ட்லர் ஒருவர், அரசியல்வாதிகள் அனைவரும் வேம்பயர்கள் என்பதை கண்டுபிடிக்கிறார். மாஸ்க் அணிந்த அந்த ரெஸ்ட்லர் எப்படி அந்த வேம்பயர்களை அழிக்கிறார் என்பதுதான் கதை. படத்துக்கு சில்வியா என பெயர் வைத்துள்ளார். முக்கியமான விஷயம், படத்தை கறுப்பு வெள்ளையில் எடுக்கயிருக்கிறார்.
 
டோராவின் திரைப்படம் என்றால் வித்தியாசமான ட்ரீட் கியாரண்டி.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

Show comments