Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - டைனோசர்களிடம் தோற்றுப்போன டெர்மினேட்டர்

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - டைனோசர்களிடம் தோற்றுப்போன டெர்மினேட்டர்
, திங்கள், 6 ஜூலை 2015 (09:52 IST)
5. Ted 2
டெட் 2 ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 11 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. நேற்றுவரை இதன் யுஎஸ் வசூல் 58.33 மில்லியன் டாலர்கள்.

 
 

4. Magic Mike XXL
நடனத்தை மையப்படுத்திய இந்தப் படம் ஜுலை 1 வெளியானது. வார இறுதியான - 3,4,5 தேதிகளில் இதன் வசூல் 11.60 மில்லியன் டாலர்கள். ஒன்று, இரண்டு தேதிகளையும் சேர்த்தால் - முதல் ஐந்து தின வசூல் 26.66 மில்லியன் டாலர்கள்.

 
 
webdunia

3. Terminator Genisys
டெர்மினேட்டர் ஜெனிசைஸ் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடிக்கும் என்று கருதினர். ஆனால், இந்தப் படம் மூனடறாவது இடத்தையே பிடித்துள்ளது. மேஜிக் மைக் போன்று ஒன்றாம் தேதி வெளியான படம், வார இறுதியில் 28.70 மில்லியன் டாலர்களையே வசூலித்தது. ஜுலை 1 முதல் 5 வரை முதல் ஐந்துதின வசூல் 44.16 மில்லியன் டாலர்கள்.

webdunia


 
 

2. Inside Out
டிஸ்னியின் இந்த அனிமேஷன் படம் சிறந்த கதையால் ரசிகர்களின் ஆதரவை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்ற வார இறுதியில் 30.11 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம் இதுவரை 246.16 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

webdunia


 

1. Jurassic World
நான்காவது வாரமும் அதே முதலிடத்தில். சென்ற வார இறுதியில் 30.90 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம் நேற்றுவரை யுஎஸ்ஸில் மட்டும் வசூலித்தது 558.14 மில்லியன் டாலர்கள்.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil