Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

Webdunia
திங்கள், 16 மார்ச் 2015 (12:32 IST)
5. Chappie 
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஹீரோவாக நடித்த தேவ் படேல் நடித்துள்ள (ஹீரோவாக அல்ல) இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. சென்றவார இறுதியில் இப்படம் 5.80 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 23.30 மில்லியன் டாலர்கள்.
 

4. Focus
வில் ஸ்மித்தின் ஃபோகஸ் சென்ற வார இறுதியில் 5.81 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 44.03 மில்லியன் டாலர்கள். 50 மில்லியன் டாலர்களில் தயாரான படம் இது.
 

3. Kingsman: The Secret Service  
சமீபத்தில் வெளியான த்ரில்லர்களில் இப்படமே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் 6.20 மில்லியன் டாலர்களை தனதாக்கிய படம், இதுவரை 107.37 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
 

2. Run All Night
சென்ற வாரம் வெளியான லியாம் நீஸனின் மற்றெnரு படம். இதுவும் டேக்கன் பாணியில் அமைந்த படம்தான். ஆனால் டேக்கன் 2 மற்றும் 3 -ஐ விட இந்தப் படத்தில் சுவாரஸியமான கதை உள்ளதாக விமர்சகர்கள் எழுதியுள்ளனர். முதல் மூன்று தினங்களில் 11.02 மில்லியன் டாலர்களை தனதாக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 

1. Cinderella
சின்ட்ரல்லா கதைகளுக்கு முடிவேயில்லை. எத்தனை படங்கள் வந்தாலும் பார்க்க ஒரு கும்பல் தயாராக உள்ளது. சுமாரான டிஸ்னியின் இந்தப் படமும் வெளியான முதல் மூன்று தினங்களில் 70.05 மில்லியன் டாலர்களை வசூலித்து மற்ற படங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

என்னை நிராகரிச்சிட்டு நீங்க படம் பண்ணவே முடியாது!.. எம்.ஜி.ஆருக்கு சவால் விட்ட வாலி!.

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் ட்ரஸ்ஸில் க்ரீத்தி ஷெட்டியின் கலக்கல் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

Show comments