Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்
, செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (15:00 IST)
5. The DUFF
இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் யுஎஸ் வசூல் 11.03 மில்லியன் டாலர்கள்.
 

4. McFarland, USA
விளையாட்டை மையப்படுத்திய படம். ரசிகர்கள், விமர்சகர்கள் என இரு தரப்பினரையும் இப்படம் கவர்ந்துள்ளது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 11.32 மில்லியன் டாலர்களை வசப்படுத்தியுள்ளது.
 
webdunia

3. The SpongeBob Movie: Sponge Out of Water 
அனிமேஷன் படமான இது பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷனை பெற்று வருகிறது. 74 மில்லியன் டாலர்களில் தயாரான படம் சென்ற வார இறுதியில் மட்டும் 15.50 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல், 125.17 மில்லியன் டாலர்கள்.
 
webdunia

2. Kingsman: The Secret Service
கிக் ஆஸ், எக்ஸ் மென் - பர்ஸ்ட் கிளாஸ் போன்ற படங்களை இயக்கிய மேத்யூ வேகனின் புதிய ஆக்ஷன் அட்வெஞ்சர். சென்ற வார இறுதியில் 17.53 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம் இதுவரை 67.11 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
 
webdunia

1. Fifty Shades of Grey
ரசிகர்கள், விமர்சகர்கள் என பாகுபாடில்லாமல் கழுவி ஊற்றப்பட்ட இந்தப் படம்தான் இந்த வாரமும் முதலிடத்தில். ஆனால், சென்ற வார இறுதியில் 94 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்த படம், இந்த வாரம் 23.25 மில்லியன் டாலர்களாக கீழிறங்கியுள்ளது. இதுவரை இதன் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ், 130.15 மில்லியன் டாலர்கள்.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil