நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: 5 நாட்களுக்கு கனமழை..!

Webdunia
ஞாயிறு, 7 மே 2023 (09:26 IST)
நாளை வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதை அடுத்து தமிழகத்தில் அவரும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை முதல் கன மழை வரையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மே ஒன்பதாம் தேதி கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மதுரை புதிய மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

சென்னையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்: இன்று சவரன் ரூ.96,320

தமிழகத்தில் மழைக்கு நீண்ட இடைவெளி: சென்னையில் வெயில்!

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

அடுத்த கட்டுரையில்
Show comments