Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த வாரம் வெளியாகும் பிராட் பிட்டின் ஃபியூரி

இந்த வாரம் வெளியாகும் பிராட் பிட்டின் ஃபியூரி
, செவ்வாய், 14 அக்டோபர் 2014 (14:46 IST)
வரும் வெள்ளிக்கிழமை பிராட் பிட்டின் ஃபியூரி வெளியாகிறது. இரண்டாம் உலகப் போர் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பதால் பிராட் பிட்டின் வழக்கமான படங்களைவிட இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 
ஃபியூரியை எழுதி இயக்கியிருப்பவர் டேவிட் ஐயர். கிறிஸ்தவமும் இந்துத்துவம் கலந்த இந்திய இயக்குனர் எல்லாம் கிடையாது. பெயரில் ஐயர் இருந்தாலும் இவர் 916 அமெரிக்கர்.
 
த ட்ரெய்னிங் டே படத்தின் திரைக்கதையை இவர்தான் எழுதினார். அதனால் ஃபியூரி பிரமாதமாக இருக்கும் என்ற முடிவுக்கு உடனே வர முடியாது. இவர்தான் இந்த வருடம் அர்னால்டின் நடிப்பில் உருவான மரண மொக்கையான Sabotage படத்தையும் எழுதி இயக்கியிருந்தார். 
 
படத்தின் பட்ஜெட் 80 மில்லியன் டாலர்கள் என்பதால் படம் தயாரிப்பாளரின் பர்ஸை கடித்தாலும் கழுத்தை நெரிக்காது.

Share this Story:

Follow Webdunia tamil