Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடிக்கப் போகும் எக்சோடஸ் - காட்ஸ் அண்ட் கிங்ஸ்

பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடிக்கப் போகும் எக்சோடஸ் - காட்ஸ் அண்ட் கிங்ஸ்
, சனி, 13 டிசம்பர் 2014 (15:04 IST)
பிரபல இயக்குனர் ரிட்லி ஸ்காட் பல்வேறு படங்களுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறவர். அவரது சமீபத்திய படங்கள் முன்பு போல் சோபிக்கவில்லை. பைபிள் கதையை மையமாக வைத்து அவர் இயக்கியிருக்கும் எக்சோடஸ் திரைப்படமும் அதிகமும் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இந்தப் படம் இந்தியாவில் சென்ற வாரம் வெளியானது. யுஎஸ்ஸில் நேற்றுதான் திரைக்கு வந்துள்ளது. முதல் நாளில் 9 மில்லியன் டாலர்களை வசூலித்து வீக்எண்ட் பாக்ஸ் ஆபிஸில் இது முதலிடத்தில் உள்ளது. தவிர, வியாழக்கிழமை ப்ரீமியர் காட்சிகளில் 1.2 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
 
இன்றும் நாளையும் சேர்த்து வார இறுதியில் 25 முதல் 30 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன் பட்ஜெட் 140 மில்லியன் டாலர்கள் என்பது முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil