உலகத்திற்கு மற்றொரு ஆபத்து.. காப்பாற்றுவார்களா இட்டர்னல்ஸ்?! – வெளியானது தமிழ் ட்ரெய்லர்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:57 IST)
மார்வெல் ஸ்டுடியோஸின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படமான இட்டர்னல்ஸ் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் மார்வெல் ஸ்டூடியோஸிற்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக மார்வெல் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மாதம் ஒரு படம் என்ற வேகத்தில் படங்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த மாதம் வெளியான ஷாங் சீ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த படமான இட்டர்னல்ஸ் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட முக்கியமான 7 கதாப்பாத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தானோஸிடமிருந்து உலகத்தை காப்பாற்றிய பிறகு ஏற்படும் சிக்கல்களையும், மற்றுமொறு வில்லனையும் இட்டர்னல்ஸ் சேர்ந்து எப்படி சமாளித்தார்கள் என்பதுதான் கதை. இந்த கதையை தொடர்ந்து மல்டிவெர்ஸ் திறக்கப்பட உள்ளதால் இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!. வீடியோவே வேறலெவல்!...

ஒன் மேன் ஷோ! ‘வா வாத்தியாரே’ படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்

பராசக்தியை பாராட்டிய ரஜினி ஜனநாயகன் பத்தி பேசினாரா?!.. பொங்கும் விஜய் ரசிகர்கள்..

அத பத்தி நான் பேச விரும்பல!.. பிரதமர் பொங்கல் விழாவில் எஸ்கேப் ஆன SK!...

‘ஜனநாயகன்; மட்டுமல்ல, விஜய்யின் இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு.. தாணு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments