ட்ரூ டிடெக்டிவ் சீரிஸில் நடிக்கும் காலின் ஃபாரெல்

Webdunia
திங்கள், 21 ஜூலை 2014 (13:04 IST)
போன் பூத், டெட் மேன் டவுன், டோட்டல் ரீகால் போன்ற முக்கியமான படங்களில் ஹீரோவாக நடித்தவர் காலின் ஃபாரெல். சினிமாவில் நடிக்க இந்த ஐரிஷ் நடிகருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதைவிட பெரிய வாய்ப்பு தொலைக்காட்சியிலிருந்து வந்துள்ளது.


 

 
அதுபற்றி பார்க்கும் முன் ஹெச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ட்ரூ டிடெக்டிவ் சீரிஸை பற்றி சொல்ல வேண்டும். அமெரிக்க தொலைக்காட்சிகளில் சீரியல்கள் சினிமா போலவே பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும். அங்கு எடுக்கப்பட்ட துப்பறியும் தொடர்களில் இன்றும் முதலிடத்தில் இருப்பது ஹெச்பிஓ வில் ஒளிபரப்பான ட்ரூ டிடெக்டிவ் சீரிஸ். மெக் கன்னகி, வூடி ஹாரல்சன் நடித்திருந்த இந்த சீரிஸ் உலகம் முழுவதும் மகத்தான வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாவது பாகத்தை தற்போது எடுக்கின்றனர்.
 
முந்தையதில் இரண்டு பேர் என்றால் இரண்டாவதில் நான்கு பேர். அதில் முக்கியமான கதாபாத்திரம் காலின் ஃபாரெலுக்கு. சினிமாவில் கிடைப்பதைவிட அதிக சம்பளம், அதைவிட அதிக பாப்புலாரிட்டி. விரும்பி ட்ரூ டிடெக்டிவ் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் காலின்.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’மெர்சல்’ படத்திற்கு பின் ‘ஜனநாயகன்’ தான்.. சாட்டிலைட் உரிமை குறித்த தகவல்..!

நீ வருவாய் என 2 மட்டுமில்ல.. 3யும் வருது.. ஓகே சொன்ன அஜித்! பெரிய ஷாக் கொடுத்த ராஜகுமாரன்

சிம்பு - வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்தில் ‘ஹார்ட் பீட்’ நடிகை.. ஆச்சரிய தகவல்..!

150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் SK படம்! இப்பவே தயாரிப்பாளர் தலையில் விழுந்த துண்டு

'ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்' இறுதி பாகத்தில் ரொனால்டோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Show comments