Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜாக்கிசான் படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் மரணம்

ஜாக்கிசான் படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் மரணம்
, புதன், 17 டிசம்பர் 2014 (19:53 IST)
ஜாக்கிசானின் புதிய படம் ஸ்கிப்ட்ரேசின் படப்பிடிப்பு ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பின் போது விபத்தில் ஒளிப்பதிவாளர் ஒருவர் மரணமடைந்தார்.
 
ஜாக்கிசான் தற்போது Skiptrace என்ற படத்தில் நடித்து வருகிறார். சைனாவில் தயாராகும் பெரிய பட்ஜெட் படங்களில் இதுவும் ஒன்று. இதில் ஹாங்காங்கைச் சேர்ந்த டிடெக்டிவாக ஜாக்கிசான் வருகிறார்.
 
ஹாங்காங் அருகிலுள்ள தீவில் படப்பிடிப்பு நடந்த போது, படக்குழு வந்த படகு நீரில் மூழ்கியது. இதில் Chan Kwok-hung  என்ற ஒளிப்பதிவாளர் நீரில் மூழ்கி மரணமடைந்தார். அவருடன் பயணித்த மற்ற ஏழு பேரும் முப்பது மீட்டர்கள் நீந்தி பத்திரமாக கரையை அடைந்தனர். விடியற்காலை மூன்று மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
 
ஜாக்கிசானின் இந்த புதிய படத்தை கிளிப்ஹேங்கர், டை கார்ட் 2 படங்களை இயக்கிய ரென்னி ஹார்லின் இயக்கி வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil