Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வவ்வால் மனிதனின் புதிய அவதாரம் ஸ்டீவ் ஜாப்ஸ்

வவ்வால் மனிதனின் புதிய அவதாரம் ஸ்டீவ் ஜாப்ஸ்
, வெள்ளி, 17 அக்டோபர் 2014 (12:45 IST)
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வரலாறை சோனி நிறுவனம் ஜாப்ஸ் என்ற பெயரில் படமாக்குகிறது. இதில் ஸ்டீவ் ஜாப்சாக நடிக்க கிறிஸ்டியன் பேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்டியன் பேல் பேட்மேன் ரிட்டர்ன், த டார்க் நைட், த டார்க் நைட் ரைசஸ் ஆகிய படங்களில் பேட்மேனாக நடித்தவர். தனக்குப் பிடித்த கதை, கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிப்பவர். த டார்க் நைட் ரைசஸ் படத்துடன் பேட்மேன் வேடத்துக்கு குட்பை சொல்லி, அதில் உறுதியாக இருப்பவர்.
 
Walter Isaacson  எழுதிய ஸ்டீவ் ஜாப்ஸ் சுயசரிதையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. படத்தை இயக்க முதலில் பரிசீலிக்கப்பட்டவர் டேவிட் பின்சர். ஜாப்சாக நடிக்க சோனியின் முதல் சாய்ஸ் லியோனார்டோ டிகாப்ரியோ. இந்த இரண்டும் நடக்கவில்லை.
 
தற்போது ஜாப்ஸnக கிறிஸ்டியன் பேல் நடிக்க டேனி பாயில் படத்தை இயக்குகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil