Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கசந்த ஆப்பிள் - விலகினார் கிறிஸ்டியன் பேல்

கசந்த ஆப்பிள் - விலகினார் கிறிஸ்டியன் பேல்
, செவ்வாய், 4 நவம்பர் 2014 (15:50 IST)
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் சுயசரிதையை சோனி நிறுவனம் படமாக்குகிறது. டேனி பாய்ல் படத்தை இயக்குகிறார். இதில் ஜாப்சாக நடிக்க கிறிஸ்டியன் பேலை ஒப்பந்தம் செய்திருந்தனர்.
இந்நிலையில் ஜாப்சாக நடிக்க நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று படத்திலிருந்து விலகியுள்ளார் கிறிஸ்டியன் பேல். இது மொத்த டீமுக்குமே பேரதிர்ச்சி.
 
இந்தப் படம் குறித்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் ஜாப்சாக நடிக்க லியோனார்டோ டிகாப்ரியோவை பரிசீலனை செய்தனர். பிறகு அவரை கைவிட்டு கிறிஸ்டியன் பேலை தேர்வு செய்தனர். பேல் வெளியேறியதைத் தொடர்ந்து மீண்டும் பால் இப்போது டிகாப்ரியோவின் கோர்ட்டில்.
 
பேல் வேண்டாமென்றதை டிகாப்ரியோ கண்டிப்பாக ஏற்கப் போவதில்லை. ஆக, ஜாப்சாக யாரை நடிக்க வைப்பது? தலையை பியத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil