Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் பெரிய திறமைசாலி - புதிய பேட்மேனை பாராட்டும் பழைய பேட்மேன்

Webdunia
புதன், 30 ஜூலை 2014 (20:03 IST)
பேட்மேன் பிகின்ஸ், த டார்க் நைட், த டார்க் நைட் ரைசஸ் படங்களில் பேட்மேனாக நடித்த கிறிஸ்டியன் பேல் இனி பேட்மேன் உடையை போடப்போவதில்லை என்று அறிவித்ததும் புதிய பேட்மேனாக நடிகர் பென் அஃப்லெக்கை அறிவித்தனர். உடனடியாக இணையத்தில் பென் அஃப்லெக்கையும், அவரை தேர்வு செய்த தயாரிப்பாளர்களையும் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். யாருக்கும் பென் அஃப்லெக்கின் மீது நம்பிக்கையில்லை.


 

 
தனது பேச்சு சாதுரியத்தால் இந்த விமர்சனங்களை கடந்துள்ளார் பென் அஃப்லெக். வரவிருக்கிற பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் - டான் ஆஃப் ஜஸ்டிஸ் படத்தில் இவர்தான் பேட்மேனாக நடித்து வருகிறார். இந்நிலையில் அஃப்லெக்குக்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைத்துள்ளது.
 
காமிக்ஸில் படமாக இருந்த பேட்மேனை திரையில் ரசிகர்கள் முதல்முதலாகப் பார்த்தது நடிகர் ஆடம் வெஸ்ட் வடிவத்தில். இவர்தான் 1966 -ல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேட்மேன் சீரியலில் பேட்மேனாக நடித்தவர். புதிய பேட்மேன் குறித்து இந்த பழைய பேட்மேன் புகழுரைகளாகப் பொழிகிறார்.
 
பென் அஃப்லெக் பேட்மேன் வேடத்துக்கு ரொம்ப ஆப்டானவர். காரணம் அவர் மிகுந்த திறமைசாலி. அவரை பேட்மேன் ரோலில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என 85 வயதாகும் இந்த பழைய பேட்மேன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இவரது பாராட்டுக்குப் பிறகு அஃப்லெக் மீதான விமர்சனங்களின் கடுமை குறைந்திருக்கிறது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments