Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்கர் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மரணம்

ஆஸ்கர் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மரணம்
, புதன், 29 ஏப்ரல் 2015 (14:11 IST)
ஹாலிவுட் அதிர்ந்து போயுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா சினிமா இன்டஸ்ட்ரியும். பிரபல கேமராமேன் ஆண்ட்ரூ லெஸ்னியின் மரணம் இருநாட்டு சினிமாதுறைகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
ஆண்ட்ரூவின் பூர்வீகம் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி. அவர் அதிகமும் பணியாற்றியது ஹாலிவுட் படங்களில். முக்கியமாக பீட்டர் ஜாக்சனின் பல படங்களுக்கு அவர்தான் ஒளிப்பதிவாளர். 
 
உலகம் வியந்த, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ட்ரையாலஜிக்கு ஆண்ட்ரூதான் ஒளிப்பதிவு செய்திருந்தார். அதன் முதல் பாகம், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் - தி ஃபெல்லோஷிப் ஆஃப் தி ரிங் படத்துக்காக 2002 -இல் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கபர் விருது அவருக்கு கிடைத்தது.
 
பீட்டர் ஜாக்சன் இயக்கிய கிங் காங், தி லவ்லி போன்ஸ், தி ஹாபிட் ட்ரையாலஜி என அனைத்துக்கும் அவர்தான் ஒளிப்பதிவு. இதுதவிர, வில் ஸ்மித் நடித்த, ஐ யம் லெஜென்ட், ரைஸ் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் ஆகியவற்றுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
கடந்த வாரம் வெளியான, ரஸல் க்ரோவின், The Water Diviner  படத்துக்கும் அவர் கேமரமேனாக பணிபுரிந்தார். அண்ட்ரூவுக்கு இப்போது 59 வயதாகிறது. கடந்த ஒரு வருடமாகவே அவருக்கு இதய நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை தனது 59 -வது வயதில் நெஞ்சு வலியில் அவரது உயிர் பிரிந்தது. 

Share this Story:

Follow Webdunia tamil