Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்கன் ஸ்னைப்பருக்கு முன்னால் ஜகா வாங்கிய டேக்கன் 3

அமெரிக்கன் ஸ்னைப்பருக்கு முன்னால் ஜகா வாங்கிய டேக்கன் 3
, திங்கள், 19 ஜனவரி 2015 (14:40 IST)
சென்ற வாரம் முதலிடத்தில் இருந்த லியாம் நீஸனின் டேக்கன் 3 இந்த வாரம் கடுமையான வசூல் வீழ்ச்சியை கண்டிருக்கிறது.


 
 
டேக்கன் படத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இது முதல் பாகம் டேக்கனால் கிடைத்தது. டேக்கன் இரண்டாம் பாகம் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. ஆனால், அதுதான் டேக்கன் 3 -வது பாகத்தின் வெற்றி. இரண்டாவது பாகத்தைவிட 3 -வது பாகம் நன்றாக இருக்கிறது என திரையரங்குகளில் கூட்டம் அம்மியது. 
 
சென்ற வாரம் முதலிடத்தில் இருந்த படம், அமெரிக்கன் ஸ்னைப்பரின் வரவால் தனது ஓபனிங் வசூலில் அறுபது சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டது. முதல்வார இறுதியில் 39.2 மில்லியன் டாலர்களை வசூலித்த படம், சென்ற வார இறுதியில்  14 மில்லியன் டாலர்களையே வசூலித்துள்ளது. நேற்றுவரை - முதல் பத்து தினங்கள் - டேக்கன் 3 -இன் யுஎஸ் வசூல் 62.8 மில்லியன் டாலர்கள்.
 
டேக்கன் 3 யின் பட்ஜெட் 48 மில்லியன் டாலர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil