Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இவங்க விடுறதா இல்லை... தயாராகிறது 23 ஜம்ப் ஸ்ட்ரீட்

இவங்க விடுறதா இல்லை... தயாராகிறது 23 ஜம்ப் ஸ்ட்ரீட்
, வியாழன், 11 செப்டம்பர் 2014 (13:27 IST)
பில் லார்ட், கிறிஸ்டோபர் மில்லர் இருவரின் இயக்கத்தில் 2012 மார்ச்சில் 21 ஜம்ப் ஸ்ட்ரீட் படம் வெளியானது. ஆக்ஷன் காமெடி ஜானரில் உருவான இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவு உலகம் எங்கும் உள்ள கமர்ஷியல் பட இயக்குனர்களை கவர்ந்தது. நம்மூரில் இந்தப் படத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளானவர், இயக்குனர் வஸந்த்.
 

இந்த வருடம் ஜுனில் 22 ஜம்ப் ஸ்ட்ரீட் வெளியானது. முதல் படத்தின் இரண்டாம் பாகம். அதே பில் லார்ட், கிறிஸ்டோபர் மில்லர். 42 மில்லியன் டாலர்களில் தயாரான 21 ஜம்ப் ஸ்ட்ரீட் 138 மில்லியன் டாலர்கள் அளவுக்கு யுஎஸ்ஸில் வசூலித்தது.

22 ஜம்ப் ஸ்ட்ரீட்டின் பட்ஜெட் 50 மில்லியன் டாலர்கள். யுஎஸ்ஸில் இதன் வசூல் 190 மில்லியன் டாலர்கள். முதல் பாகத்தைவிட மிக அதிகம். உலகம் முழுவதும் சேர்த்து 320 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்தது.

பணம் கொட்டும் மரத்தை மீண்டும் உலுக்க ஆரம்பித்துள்ளது சோனி நிறுவனம். எஸ், 23 ஜம்ப் ஸ்ட்ரீட் விரைவில் தயாராகிறது. காமெடி ஆக்ஷனுக்கு நீங்களும் தயாராகுங்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil