Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாரிபாட்டராக இனி நடிக்கப் போறதில்லை - நடிகர் திடீர் அறிவிப்பு

ஹாரிபாட்டராக இனி நடிக்கப் போறதில்லை - நடிகர் திடீர் அறிவிப்பு
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (16:26 IST)
ஜே.கே.ரவுலிங் எழுதிய ஹாரிபாட்டர் நாவல்கள் அனைத்தையும் ஹாலிவுட் பிரித்து மேய்ந்துவிட்டது. ரஜினி படத்துக்கு முதல்நாள் இரவே காத்திருப்பது போல் இந்த நாவலுக்கு அமெரிக்காவில் தூக்கம் விழித்த ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.
ஹாரிபாட்டராக இதுவரை திரையில் தோன்றியவர் நடிகர் டேனியல் ரெட்ஃகிளிப். ஹாரிபாட்டர் என்றதும் இவரது உருவம்தான் யாருடைய மனதிலும் வரும். டீன்ஏஜ் பருவத்துக்கு முன்பே இங்கிலாந்தின் அதிகம் சம்பாதிக்கும் நடிகராக ரெட்ஃகிளிப்பை உயர்த்தியது ஹாரிபாட்டர் கதாபாத்திரம்தான்.
 
ரவுலிங் அடுத்து ஒரு கதையை எழுதி வருகிறார். அதில் ஹாரிபாட்டராக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு யோசிக்காமல் உடனே நோ சொன்னார் ரெட்ஃகிளிப். ஹாரிபாட்டரின் குணாம்சங்களை அவரது குணங்களாக கருதுகிற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அதனால் ஹாரிபாட்டர் இத்தோடு போதும் என முடிவு செய்துள்ளார். முக்கால்வாசி முகத்தை மூடி வரும் பேட்மேனை மாற்றியதற்கே ரசிகர்கள் இணையத்தில் அடித்துக் கொண்டார்கள். ஹாரிபாட்டரை மாற்றுகையில் எப்படி கதறப் போகிறார்களோ.
 

Share this Story:

Follow Webdunia tamil