Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெனிஸில் திருமணம் செய்யப் போகும் ஜார்ஜ் க்ளூனி

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2014 (14:26 IST)
ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி தனது திருமணம் இன்னும் சில வாரங்களில் வெனிஸில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
க்ளூனிக்கு இப்போது 53 வயதாகிறது. ஒருமுறை திருமணம் செய்து விரைவிலேயே விவகாரத்து பெற்றுக் கொண்டார். அதன் பிறகு க்ளூனி திருமணமே செய்து கொள்ளவில்லை. அதேநேரம் இரண்டு டஜன் பெண்களுடன் டேட்டிங் என்ற பெயரில் லூட்டி அடித்திருப்பார்.
 
கடைசிவரை மகன் க்ரோனிக் பேச்சிலராக இருப்பானோ என்று க்ளூனியின் தாய், தந்தை கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரம், அமல் அலெமதின் என்ற பெண் வழக்கறிஞரை க்ளூனி சந்தித்தார். காதலில் விழுந்தார். கடந்த ஏப்ரலில் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார்.
 
அவரைதான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். திருமணம் இன்னும் சில வாரங்களில் வெனிஸில் நடக்கும் என க்ளூனி கூறியுள்ளார்.
 

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

Show comments