Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிண்ட்ஸே லோகனை கவர்ந்த ஹிந்துயிஸம்

லிண்ட்ஸே லோகனை கவர்ந்த ஹிந்துயிஸம்
, செவ்வாய், 15 டிசம்பர் 2009 (19:04 IST)
வெளிநாட்டவரை கவரும் இந்திய அம்சங்களில் ஒன்று அதன் ஆன்மிகம். குறிப்பாக யோகா, தியானம் போன்றவை. இந்த இரண்டிலும் மனதை பறிகொடுத்த ஹாலிவுட் பிரபலங்கள் பலர் உண்டு. லேட்டஸ்ட் வரவு, லிண்ட்ஸே லோகன்.

பிபிசி எடுத்த 3 ஆவணப் படங்களுக்காக சமீபத்தில் இந்தியா வந்தார் லிண்ட்ஸே. வடக்கு பீகா‌ரிலுள்ள ஆசிரமம் ஒன்றில்தான் அவர் தங்கியிருந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கியிருந்த இடம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் தங்கியிருந்த சில தினங்களிலேயே இந்தியாவின் ஆன்மிகம் அவரை கவர்ந்திருக்கிறது. நிர்வாணச் சாமியார்களையும் அவர் பார்த்திருக்கிறார். அமெ‌ரிக்கா திரும்பிய பிறகும் தனது இந்திய விசிட் குறித்துதான் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார் லிண்ட்ஸே.

வாய்ப்பு அமைந்தால் மீண்டும் இந்தியா வர‌த் தயாராக இருக்கிறாராம் இந்த ஹாலிவுட் நடிகை.

Share this Story:

Follow Webdunia tamil