Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - அறிமுக இயக்குனரின் படம் முதலிடத்தில்

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2014 (14:50 IST)
5. Dolphin Tale 2
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பை ஓரளவே பூர்த்தி செய்துள்ளது.
சென்ற வார இறுதியில் 8.87 மில்லியன் டாலர்களை தனதாக்கிய இப்படம் இதுவரை 26.93 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

4. No Good Deed
 
விமர்சகர்கள் சுமார் என்ற போதும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கௌரவமான இடத்தில் உள்ளது.

சென்ற வார இறுதியில் 9.79 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படத்தின் சென்ற ஞாயிறுவரையான யுஎஸ் வசூல் 39.7 மில்லியன் டாலர்கள்.

3. This Is Where I Leave You
 
காமெடி ட்ராமா வகையைச் சேர்ந்த இப்படம் சென்ற வாரம் வெளியானது.

முதல் மூன்று தினங்களில் 11.56 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

2. A Walk Among the Tombstones
 
மைனாரிட்டி ரிப்போர்ட், த வால்வரைன் போன்ற படங்களின் திரைக்கதையாசிரியரான ஸ்காட் ஃ;ப்ராங்க் இயக்கியிருக்கும் இரண்டாவது படம்.

லியாம் நீஸன் நடித்துள்ளார். சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 12.76 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

1. The Maze Runner
 
ஆர்ட் டிபார்ட்மெண்டில் வேலை பார்த்து சில குறும்படங்களை இயக்கியவர் வெஸ் பால்.

இவர் இயக்கியிருக்கும் முதல் முழுநீளப்படம் இது. படம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 32.51 மில்லியன் டாலர்களை வசமாக்கியுள்ளது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments