Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர்மேன் படங்களில் நடிக்கப் போவதில்லை

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (18:14 IST)
மேன் ஆஃப் ஸ்டீல் படத்தில் ரஸல் க்ரோவ் Jor-El  என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இது சூப்பர்மேனின் தந்தை கதாபாத்திரம். தற்போது பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் படம் தயாராகி வருகிறது. இந்தப் படம் உள்பட இனி எந்த சூப்பர்மேன் படங்களிலும் நடிக்கப் போவதில்லை என க்ரோவ் அறிவித்துள்ளார்.
Jor-El  கதாபாத்திரம் மேன் ஆஃப் ஸ்டீலில் சாகடிக்கப்பட்டு விட்டது. சாகடிக்கப்பட்டதற்கு முன்புள்ள கதையை எடுத்தாலும் தயாரிப்பு நிறுவனமும் இயக்குனரும் தன்னை இனி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைக்க மாட்டார்கள், அவர்களுக்கு அப்படியொரு ஐடியாவே இல்லை என க்ரோவ் கூறினார். அதன் காரணமாகவே இனிமேல் சூப்பர்மேன் படங்களில் நடிக்கப் போவதில்லை என அறிவித்தார்.
 
பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் 2016ல் வெளியாகிறது. அதில் சூப்பர்மேனின் தந்தை கதாபாத்திரம் இருந்தாலும் படத்தை இயக்கும் ஸாக் ஸ்னைடர் க்ரோவை நடிக்க வைப்பாரா என்பது சந்தேகமே.
 
க்ரோவின் நோவா எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. உலகம் முழுவதும் மந்தமாகவே ஓடுகிறது. தற்போது தி வாட்டர் டிவைனர் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். க்ரோவின் பழைய பெயரை மீட்டெடுப்பதாக இந்தப் படமாவது அமையட்டும்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments